ஆம்னி பஸ்கள் எப்போது?: பயணிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் எப்போது?: பயணிகள் எதிர்பார்ப்பு

Updated : செப் 22, 2020 | Added : செப் 22, 2020 | கருத்துகள் (3)
Share
சென்னை: தமிழகத்தில், 'ஆம்னி' பஸ்கள் எப்போது இயங்கும் என்ற எதிர்பார்ப்பில், பயணியர் உள்ளனர். தமிழகத்தில், செப்., 7 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், 60 சதவீத பயணியருடன் மட்டுமே, பஸ்களை இயக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.அதேநேரத்தில், தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், 'பஸ்களை இயக்காத, ஆறு மாதங்களுக்கான

சென்னை: தமிழகத்தில், 'ஆம்னி' பஸ்கள் எப்போது இயங்கும் என்ற எதிர்பார்ப்பில், பயணியர் உள்ளனர். தமிழகத்தில், செப்., 7 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், 60 சதவீத பயணியருடன் மட்டுமே, பஸ்களை இயக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.



latest tamil news



அதேநேரத்தில், தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், 'பஸ்களை இயக்காத, ஆறு மாதங்களுக்கான சாலை வரி, 2.50 லட்சம் ரூபாயை ரத்து செய்ய வேண்டும்' என, அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு, தமிழக அரசு இசையவில்லை. அதாவது, தமிழகத்தில் உள்ள, 4,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு, 100 கோடி ரூபாய்க்கும் மேல், அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால், அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், வரியாக, 2.50 லட்சம் மற்றும் பராமரிப்பு கட்டணமாக, 3 லட்சம் என, ஒரு பஸ்சுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவை. அதனால், 60 சதவீத பயணியருடன் இயக்குவதால், லாபம் கிடைக்காது என, தனியார் பஸ் உரிமையாளர்கள், பஸ்களை இயக்க மறுக்கின்றனர்.


latest tamil news


இது குறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பஸ்கள் ஓடாத நாட்களுக்கு, சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்; இன்சூரன்ஸ் கட்டணத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்; 100 சதவீத பயணியருடன் இயக்க அனுமதிக்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை, அரசு பதில் அளிக்கவில்லை. வரி தள்ளுபடி குறித்த, எங்களின் வழக்கில், வரும், 25ம் தேதி தீர்ப்பு வர உள்ளது. அதில் சாதகமான முடிவு ஏற்பட்டால், அக்., முதல் பஸ்களை இயக்குவது குறித்து முடிவெடுப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X