திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியர்களுடன் நாரை மீதமர்ந்த கோலத்தில் எழுந்தருளினார்.அஷ்ட திக்கு பாலகர்களும் வணங்கும் பெருமைக்குரியவர் திருப்பதி வேங்கடவன் என்பதை குறிக்கவே சர்வபபூபாள வாகனத்தில் உலா.
இன்று காலையில் கேட்பவர்க்கு கேட்ட வரம் வழங்கும் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையும் ஆண்டாள் கிளியும் வருடந்தோறும் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது போல இந்த வருடமும் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த மாலையைச் சூடிக்கொண்டு ஐந்தாம் நாளான நாளை காலை தந்தப்பல்லக்கில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலாவருவார் நாளை மாலை விழாவின் முக்கிய நாளான கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவார்.நிகழ்வுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும்.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE