டில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம் ; டிஎம்ஆர்சி| Dinamalar

டில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம் ; டிஎம்ஆர்சி

Updated : செப் 22, 2020 | Added : செப் 22, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி : டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 9 நாட்களில் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக 2000 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிப்பதாக DMRC தெரிவித்து உள்ளது.டில்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு, அரசின் வழிகாட்டுதல் நடவடிக்கை படி, செப்., 7 முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.

புதுடில்லி : டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 9 நாட்களில் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக 2000 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிப்பதாக DMRC தெரிவித்து உள்ளது.latest tamil newsடில்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு, அரசின் வழிகாட்டுதல் நடவடிக்கை படி, செப்., 7 முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. ஆயினும் மெட்ரோ ரயில்களில், பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ( DMRC) அறிவுறுத்தியது.


latest tamil newsஆயினும், 15 நாட்களுக்குள் DMRC விதிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க மறுப்பதாக, தெரிய வந்துள்ளதால், இதற்காக டில்லி மெட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) கடந்த 9 நாட்களில் (செப்., 11 - 20 முதல்) 2,214 பயணிகளுக்கு ஸ்டேஷன் வளாகத்திலும், ரயில்களிலும் மாஸ்க் அணியாததற்காக அபராதம் விதித்துள்ளது. டில்லி மெட்ரோவின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் பிரிவு 59 ன் கீழ், நிபந்தனையை மீறுபவர்களுக்கு பொது தொல்லைகளை உருவாக்கிய குற்றத்திற்காக 200 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.


latest tamil newsமெட்ரோ நெட்வொர்க்கிற்குள் பயணிகள் எல்லா நேரங்களிலும் மாஸ்க்குகளை (Face Mask) அணிந்து கொள்வதையும், தனி மனித இடைவெளி (Social Distancing) விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதையும் உறுதி செய்வதற்காக DMRC ஒரு சிறப்பு பறக்கும் படை அணியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. Yellow Line ( சமாய்பூர் பத்லி - ஹுடா சிட்டி சென்டர் ) அதிக எண்ணிக்கையிலான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து Violet Line (காஷ்மீரி கேட் - ராஜா நஹர் சிங் பல்லப்கர்) மற்றும் Blue Line ( துவாரகா செக் -21 முதல் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலி ) உள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X