ரத்த சர்க்கரை அளவு
அமெரிக்காவின் 'அப்போட்' நிறுவனம் உலகின் முதல் குளுகோஸ் பயோ சென்சாரை தயாரித்துள்ளது. 'காயின்' போல உள்ள இதனை விளையாட்டு வீரர்கள் தங்களது கையின் மேல் புறத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சோதிக்கும். இந்த சென்சாரை புளுடூத் மூலம் அலைபேசியுடன் இணைத்துக்கொள்ளலாம். இதனால் அலைபேசி மூலம் ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளலாம். பாதிப்பு இருப்பின் மருத்துவர்களை அணுகலாம். சைக்ளிங், ஓடுதல், உடற்பயிற்சி, நீச்சல், குளியல் என அனைத்து தருணங்களிலும் அணிந்து கொள்ளலாம்.
தகவல் சுரங்கம்
சைகை மொழி
முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்களே காது கேளாதவர். விரல்களை அசைத்து காட்டும் சைகை மொழி, மனிதனின் முதல் மொழி எனப்படுகிறது. இதனை காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள் பயன்படுத்துகின்றனர். உலகில் காது கேட்காதவர்கள் 7.2 கோடி பேர் உள்ளனர். இதில் 80 சதவீதம் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களால் 300 சைகை மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. ஐ.நா., சார்பில் உலக காதுகேளாதோர் வாரத்தின் ஒரு பகுதியாக செப்.,23ல் உலக சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE