விவசாய மசோதா பற்றி சிதம்பரம் விமர்சனம்: நெட்டிசன்கள் பதிலடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாய மசோதா பற்றி சிதம்பரம் விமர்சனம்: நெட்டிசன்கள் பதிலடி

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (31)
Share
புதுடில்லி : விவசாய மசோதா தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலானது.விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையிலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையிலும் சிறப்பு மசோதாக்கள் உருவாக்கப்பட்டு பார்லிமென்ட்டில்
PChidambaram, பசிதம்பரம்,

புதுடில்லி : விவசாய மசோதா தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலானது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையிலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையிலும் சிறப்பு மசோதாக்கள் உருவாக்கப்பட்டு பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகளின் அமளி, ரகளைக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பலன் பெறும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காதது மற்றும் அதை சட்டமாக்காதது பற்றி கேள்வி எழுப்பி வருவதுடன், இது மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வேலை என கூறி வருகின்றனர். இதுதொடர்பான சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. செப்., 25ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


latest tamil news
அதேசமயம் இது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மசோதா. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விவசாய மசோதா தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அதில், ''விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என பிரதமரும், அமைச்சர்களும் கூறுகின்றனர். அது எப்படி என்று கூற முடியுமா? எந்த விவசாயி, எந்த வர்த்தகருக்கு விற்பனை செய்தார் என்பது அரசுக்கு எப்படி தெரியும். நாடு முழுதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன. அதை எப்படி அறிந்து கொள்வார்கள். இவற்றுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் எப்படி குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய முடியும்.

எந்த சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தனியாக கொள்முதல் செய்பவர் தர சம்மதித்துள்ளார். இதுபோன்று விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் மோடி அரசு நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்ற மோடியின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று அவர் கூறிய வாக்குறுதி போன்றது'' என பதிவிட்டிருந்தார்.


latest tamil news
சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவர், ''இப்போது சட்டமாக்கப்பட்டுள்ள மசோதாவை முழுமையாக நீங்கள் படித்தீர்களா என சந்தேகிக்கிறேன். ஒரு தனியார் நிறுவனம் வாங்குகிறது என்றால் அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளுடன் அவர்கள் போட்ட ஒப்பந்தப்படி அதை வாங்கலாம். அரசு தான் குறைந்தபட்ச ஆதார விலையுடன் வாங்கும். இந்த இருவரில் விவசாயிக்கு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அவர்களிடம் விற்கலாம்.

குறைந்தபட்ச ஆதார விலையை தேடி மண்டிக்கு போகும் போது தான் விவசாயி போக்குவரத்து செலவையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதேசமயம் தனியாரிடம் விற்கும் போது அவர்களே போக்குவரத்து செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா. எப்படி நீங்கள் நிதி அமைச்சராக இருந்தீர்கள்'' என தெரிவித்துள்ளார்.


latest tamil news
மற்றொருவர், ''விவசாயிக்கு தெரியும் தனது பொருளை எவ்வளவுக்கு விற்கலாம் என்று. தனியார் ஒருவர் நல்ல விலை கேட்டால் அவர் அதில் விற்று லாபம் பார்க்கலாம். அவர் நினைத்த விலை கிடைக்கவில்லை என்றால் அரசின் மண்டியில் விற்றால் குறைந்தபட்ச ஆதார விலையாவது அவருக்கு நிச்சயம் கிடைக்கும். இதுகூட உங்களுக்கு தெரியவில்லையா'' என கருத்து பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X