பொது செய்தி

இந்தியா

லேசர் வழிகாட்டும் ஏவுகணை சோதனை வெற்றி

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
DRDO, laser, guided, anti-tank, missile, MBTArjun,

புதுடில்லி; எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும் வகையில், லேசர் வழிகாட்டும் ஏவுகணையை அர்ஜூன் டாங்கியில் பொறுத்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.

மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் நடந்த சோதனையில், 3 கி.மீ., தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை, குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக தாக்கியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புனேவை மையமாக கொண்டு செயல்படும் ஆர்மமென்ட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (ஏஆர்டிஇ), ஹை எனர்ஜி மெட்டிரியல்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, லேசர் வழிகாட்டுதலுடன் செயல்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியுள்ளது.


latest tamil news



இந்த சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: அகமது நகரில் லேசர் வழிகாட்டுதலுடன் செயல்படும் ஏவுகணையை , அர்ஜூன் டாங்கியில் பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில், இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைத்த டிஆர்டிஓ குழுவை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-செப்-202018:14:24 IST Report Abuse
Nagarajan D மோடியின் ராஜ்யத்தில் எல்லாம் முடியும்.... காந்தியின் தேசத்தில் எதுவும் முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X