'அலெக்சி நவால்னி மக்களைப்போல் சுதந்திரமாக இருக்கலாம்:' ரஷ்யா அறிவிப்பு

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மாஸ்கோ: 'அலெக்சி நவால்னி தனது சொந்த நாட்டிற்கு வந்தால், பிற குடிமக்களைப் போல் சுதந்திரமாக இருப்பார்' என, ரஷ்யா தெரிவித்துள்ளது.



latest tamil news




ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.


latest tamil news



இந்நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அலெக்சி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.



latest tamil news



இந்நிலையில், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ''அலெக்சி ரஷ்யாவுக்குத் திரும்ப வந்தால், மற்ற ரஷ்யக் குடிமக்களைப் போல் சுதந்திரமாக இருப்பார்,'' எனத் தெரிவித்துள்ளார்.

'நவால்னி தானே விஷத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்' என, ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-செப்-202018:32:14 IST Report Abuse
Nagarajan D அட அங்கேயும் ஒரு பப்பு காந்தி சுடலையின் கலவையில் ஒரு தலைவர் புதின்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X