கொரோனா: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020
Share
Advertisement

ரியாத்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும், இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும் சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.


latest tamil news



இந்நிலையில் சவுதி அரேபிய அரசின், சவுதி அரேபியப் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் சவுதி அரேபியாவுக்கு இயக்கவும், சவுதி அரேபியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்குப் பயணிகள் விமானத்தை இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்கு முன் எந்த பயணியாவது வந்திருந்தால் அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசின் அழைப்பின் பெயரில், அலுவல்ரீதியாக வருவோருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது. இந்தத் தடை உத்தரவு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாலிருந்து இயக்கப்படும் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இதேபோல், இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அக்., 3ம் தேதி வரை இந்திய விமானத்துக்குத் தடை விதித்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X