பொது செய்தி

இந்தியா

டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் 82 வயது இந்திய மூதாட்டி

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
டைம் இதழ் ,செல்வாக்கு பட்டியல் ,82 வயது ,ஷாகின்பாக்,   மூதாட்டி

புதுடில்லி: சி.ஏ.ஏவுக்கு எதிராக டில்லி ஷாகின்பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட 82 வயது மூதாட்டி டைம் இதழின் 2020 ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் குடியுரிமை சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தலைநகர் டில்லியில் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு வன்முறை சம்பவங்களும் நடந்தேறின.


latest tamil news



இதனிடையே டில்லி ஷாகின் பாக் பகுதியை சேர்ந்தவர் 82 வயது மூதாட்டி பில்கிஸ் இவர் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெண்களுடன் சேர்ந்து அமைதியான போராட்டத்தை நடத்தி வந்தார். 82 வயதான அவர் காலை 8 மணிமுதல் நள்ளிரவு வரையில் ஒரு கையில் தேசிய கொடியை ஏந்தியும் , மறுகையில் பிரார்த்தனை செய்வதற்கான தரை விரிப்புடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் இவர் 'ஷாஹீன் பாக் கி தாதி' என்று பிரபலமாக அறியப்பட்டார். இதனையடுத்து அவர் டைம் இதழின் 2020 ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக டைம் இதழில் புகழ்பெற்றவர்களாக இந்திய பிரதமர் மோடி , பாலிவுட் ஆக்டர் ஆயுஷ்மான் குர்ரானா, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றம் மருத்துவதுறையின் ரவீந்திரா குப்தா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் உலகளவில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அலிபாபா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஜாங், உள்ளிட்ட பலர் டைம் இதழில் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் .

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
25-செப்-202008:24:56 IST Report Abuse
natarajan s இந்த அம்மாவுக்கு இவளவு முக்கியத்துவம் கொடுத்து தன்னை இவளவு தாழ்த்தி கொண்டு இருக்க வேண்டாம் இந்த TIME மகசின்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
24-செப்-202012:30:58 IST Report Abuse
Suppan இந்த வகையில் ஷர்ஜீல் இமாம் , கன்ஹையாலால், தாஹிர் ஹுசைன் இன்னும் பல பாகிஸ்தானின் கைக்கூலிகளும், திவீரவாதிகளும் டைம்ஸ் பத்திரிக்கையால் பிரபலமாக்கப்படலாம். டைம்ஸ் இந்தியாவுக்கு எதிரான பத்திரிகை என்று எல்லோருக்கும் தெரியும் .
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
24-செப்-202010:35:04 IST Report Abuse
vns TIMES ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை. அது எழுதுவதெல்லாம் வெறும் பொய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X