சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 23, 2020
Share
Advertisement
வலி குறைய வழிஉடலில் ஏற்படும் வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு, பாதிக்கப்பட்டவரின் மனதை திசை திருப்புவது பலனளிக்கிறது என ஜெர்மனியின் முனிச் பல்கலை 20 தன்னார்வலர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்தில் இருந்து இறங்கு வரிசையாக (பின்னோக்கி) எண்ணச் சொல்வது, மற்ற வித்தியாசமான எண்ணங்களை விட, வலிகளில் இருந்து விடுபடுவதற்கு மிகுந்த பலன்

வலி குறைய வழி

உடலில் ஏற்படும் வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு, பாதிக்கப்பட்டவரின் மனதை திசை திருப்புவது பலனளிக்கிறது என ஜெர்மனியின் முனிச் பல்கலை 20 தன்னார்வலர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்தில் இருந்து இறங்கு வரிசையாக (பின்னோக்கி) எண்ணச் சொல்வது, மற்ற வித்தியாசமான எண்ணங்களை விட, வலிகளில் இருந்து விடுபடுவதற்கு மிகுந்த பலன் தருகிறது. உடல் வலிக்கும், மூளையின் பல்வேறு பிரிவுகளின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


தகவல் சுரங்கம்




உலக கடல்சார் தினம்



உலக பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எரிசக்தி, இரும்பு, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள் உட்பட பல சரக்கு போக்குவரத்துகள் கப்பல் மூலமே நடக்கிறது. ஏற்றுமதி துறையில் கடல்சார் வணிகமே பிரதானம். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது, கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தி உலக கடல்சார் நிறுவனத்தால் செப்., கடைசி வியாழன் (24ம் தேதி) உலக கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'நிலையான பூமிக்கான நிலையான கப்பல்போக்குவரத்து' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X