என்.ஜி.ஓ.,க்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என்.ஜி.ஓ.,க்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்

Updated : செப் 25, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி : என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பதிவு செய்ய, அதன் உறுப்பினர்களின் ஆதார் எண்கள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட, அதன் செயல்பாடுகளை கண்காணித்து, ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா,
என்.ஜி.ஓ.,க்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்!

புதுடில்லி : என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பதிவு செய்ய, அதன் உறுப்பினர்களின் ஆதார் எண்கள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட, அதன் செயல்பாடுகளை கண்காணித்து, ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.

எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த, 21ல் நிறைவேறியது. இந்நிலையில், ராஜ்யசபாவில், இம்மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நடந்த விவாதத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர், நித்யானந்த் ராய் பேசியதாவது:

இந்த மசோதா, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிரானது அல்ல. அவர்களின் நடவடிக்கையில், வெளிப்படை தன்மையை கொண்டு வருவதே இதன் நோக்கம். வெளிப்படை தன்மையுடன் செயல்பட விரும்பாதவர்களுக்கு வேண்டுமானால், இது தவறாக தெரிய வாய்ப்புள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவுகளுக்கான தொகை, 50 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறைக்கப்படுகிறது.


ரூ.20 ஆயிரம் கோடிதன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் எப்.சி.ஆர்.ஏ., சான்றிதழை, மத்திய அரசிடம் சமர்ப் பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில், பொதுத்துறை ஊழியர்கள் ஈடுபடக் கூடாது.கடந்த காங்கிரஸ் ஆட்சியில், நிதி அமைச்சராக, சிதம்பரம் பதவி வகித்த போது, 'ஆண்டொன்றுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடைகள் வருகிறது. 'அதில், 10 ஆயிரம் கோடி எங்கு செல்கிறது என்று கணக்கு வழக்கு இல்லை' என, தெரிவித்தார்.எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடையை தணிக்கை செய்யவும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே, இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், உறுப்பினர்களாக உள்ளவர்களின் விபரங்களை மறைக்கும் நிகழ்வுகளும், கடந்த காலங்களில் நடந்துள்ளன. அதை தவிர்க்கும் பொருட்டு, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட, அனைவரது ஆதார் எண் களும், இணைக்கப்படுவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


உறுப்பினர்கள் எதிர்ப்புஇந்நிலையில், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், டில்லியில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியில், கட்டாயமாக கணக்கு தொடங்கி, அந்த கணக்கில் மட்டுமே வெளிநாட்டு நன்கொடைகளை பெற வேண்டும் என, புதிய சட்ட திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்கு பதில் அளித்து, மத்திய இணை அமைச்சர், நித்யானந்த் ராய் கூறியதாவது:எஸ்.பி.ஐ., வங்கிக்கு, நாடு முழுதும் கிளைகள் உள்ளன. புதிய கணக்கு துவங்குவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், டில்லிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

தங்களுக்கு அருகாமையில் இருக்கும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் வாயிலாகவே, டில்லியில் கணக்கு துவங்க முடியும்.மேலும், டில்லி எஸ்.பி.ஐ., வங்கி கணக்கில் இருந்து, உள்ளூரில் உள்ள தங்கள் வங்கி கணக்குக்கு, தேவையான நிதியை, 'ஆன்லைன்' வாயிலாக, மாற்றிக் கொள்ளவும் முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

அ.தி.மு.க., உறுப்பினர், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் பேசுகையில், ''தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க சொல்வதில் தவறு இல்லை. ''அதே நேரத்தில், கொரோனா பரவி வரும் காலத்தில், பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, இது அச்சுறுத்தலாக அமைந்துவிட கூடாது,'' என்றார்.விவாதத்திற்கு பின், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் மசோதா நிறைவேறியதால், இனி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், சட்ட வடிவம் பெறும்.இதற்கிடையே, மூன்று முக்கிய தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்களுக்கு, ராஜ்யசபா நேற்று ஒப்புதல் அளித்தது.


300 தொழிலாளர்கள்நிறுவனங்களை மூடுவதற்கான தடைகளை நீக்கி, 300 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களில், அரசு அனுமதியின்றி ஊழியர்களுக்கு, சம்பளம் இல்லாத விடுமுறை அளிக்கவும், பணிநீக்கம் செய்யவும் இந்த மசோதா அனுமதிக்கும்.இம்மசோதா, லோக்சபாவில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, நேற்று நிறைவேறியது.


11 எம்.பி.,க்களுக்குபிரிவு உபசாரம்பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, சமாஜ்வாதியை சேர்ந்த, ராம்கோபால் யாதவ், காங்கிரசை சேர்ந்த, ராஜ் பாபர் உட்பட, 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள், வரும் நவம்பரில் ஓய்வு பெறுகின்றனர். பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் நேற்று என்பதால், ஓய்வு பெறும் எம்.பி.,க் களுக்கு, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு பிரிவு உபசாரம் அளித்தார். 'ஓய்வு பெறுபவர்களில் சிலர், மறு தேர்தலுக்கு பின், மீண்டும் பதவி ஏற்பர்' என, அவர் தெரிவித்தார்.


அதிகாரப்பூர்வ மொழி மசோதா நிறைவேற்றம்ஜம்மு -- காஷ்மீரில், உருது மற்றும் ஆங்கிலம் ஆகியவை, அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த பட்டியலில், காஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தியையும் இணைக்கும், ஜம்மு -- காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழிகள் மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இம்மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X