அக்.,1 முதல் ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் அமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,1 முதல் 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம் அமல்

Updated : செப் 25, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (3)
Share
சென்னை : தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம், அடுத்த மாதம், 1ம் தேதி அமலாக உள்ளது. இந்நிலையில், திட்டத்தின் செயலாக்கம் குறித்து, முதல்வரும், துணை முதல்வரும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜு, ஜெயகுமார்,
அக்.,1 முதல் 'ஒரே நாடு; ஒரே  ரேஷன்' திட்டம்  அமல்


சென்னை : தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம், அடுத்த மாதம், 1ம் தேதி அமலாக உள்ளது. இந்நிலையில், திட்டத்தின் செயலாக்கம் குறித்து, முதல்வரும், துணை முதல்வரும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜு, ஜெயகுமார், அன்பழகன், காமராஜ். மற்றும் தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், கூட்டுறவு துறை செயலர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் விளக்கினர். எவ்வித புகாரும் வராத வகையில், திட்டத்தை செயலாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தினார். கூட்டம் முடிந்த பின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை -- கன்னியாகுமரி தொழில் தட திட்டம், சென்னை எல்லை சாலை திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து, உயர்மட்டக் குழு கூட்டம், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்தது.கூட்டத்தில், நெடுஞ்சாலை துறை செயலர் கார்த்திக், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் அருண்தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X