அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு ஆதரவாக விளம்பரம் ஆந்திரா மாடலிங் பெண் ஆவேசம்

Added : செப் 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 தி.மு.க.,வுக்கு ஆதரவாக விளம்பரம் ஆந்திரா மாடலிங் பெண் ஆவேசம்

கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காக, ஆந்திரா 'மாடலிங்' பெண் புகைப்படத்துடன் வெளியான, சர்ச்சைக்குரிய விளம்பரத்தால், தி.மு.க.,வுக்கு சிக்கல் வந்துள்ளது.

ஆந்திர மாடலிங் பெண் அனகாவின் போட்டோவுடன், 'காணவில்லை' என்ற தலைப்பில் கீழ், கண்டன வாசகத்துடன், ஒரு விளம்பரம், நேற்று சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள விபரம்:

உயரமான, அழகான, 24வயது பெண்ணை காணவில்லை. அன்பு மகளே காயத்ரி, தயவு செய்து, வீட்டுக்கு வந்து விடு. நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம். உன்னுடைய, இரண்டு கோரிக்கைகளை, நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். முதலாவது கோரிக்கையின் படி, நீ விரும்பிய வேலைக்கு செல்லலாம்; நாங்கள் தடுக்க மாட்டோம். இரண்டாவது கோரிக்கையின் படி, நம் குடும்பத்தில் உள்ள அனைவரும், 'ஆன்லைன்' வழியாக, தி.மு.க.,வின், 'எல்லாரும் நம்முடன்' திட்டத்தில் இணைந்து விட்டோம். எனவே, நீ எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்கு வரவும். இப்படிக்கு, பார்த்தசாரதி.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில், பெற்றோர் சேரவில்லை என்ற காரணத்தால், மகள் வீட்டை விட்டு ஓடிச் செல்வது போலவும், அதனால், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டோம் என்பதை, காணவில்லை என்ற விளம்பரம் வாயிலாக, மகளுக்கு தெரியப்படுத்துவது போலவும், இந்த விளம்பரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரத்தில் உள்ள, ஆந்திர மாடலிங் பெண் அனகா, தனக்கு தெரியாமல், தன் போட்டோ பயன்படுத்தப்பட்டது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளார். 'இந்த விளம்பரத்தில், நான் பங்கேற்க வில்லை. என் போட்டோவுடன் வந்த விளம்பரம், எந்த பத்திரிகையில் வந்துள்ளது என்பதும், எனக்கு தெரியாது. இதை கண்டுபிடித்து, எனக்கு தகவல் தந்தால், போலீசில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்' என, தன் முகநுால் பக்கத்தில், அனகா பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த விளம்பரம், தி.மு.க.,வின் தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐபேக்' தயாரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதா அல்லது வேறு கட்சிகளின் வேலையா என்ற, கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், யு டியூப் சேனல்களும், தி.மு.க.,வுக்கு ஆதரவாக வெளியான இவ்விளம்பரத்தை, கேலி செய்துள்ளன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
24-செப்-202008:43:55 IST Report Abuse
நிலா எல்லா வண்டவாளங்களும் தேர்தல் முடிவில் தண்டவாளம் ஏறும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-செப்-202008:29:44 IST Report Abuse
Bhaskaran சிறுவயதில் திமுக காரர்கள் மிக விவரமாக பேசுவதை பார்த்துள்ளேன் .இப்போ இருக்கிறவனெல்லாம் தாத்தியாஇருக்காங்களே ..kaasu mattumthaan குறிகோள்ன்னு வந்துட்டாங்க
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
24-செப்-202007:39:03 IST Report Abuse
Raman ஹா ஹா ஹா .. பாவம் பாஜக என்ன தில்லுமுல்லு எல்லாம் செய்ய வேண்டியிருக்கு?
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
24-செப்-202009:11:52 IST Report Abuse
Sathya Dhara தில்லு முள்ளு என்பதற்கு மொத்த உலகலாவிய ஏஜென்ட் தீய முரட்டு கழகம் தான். இது ஊரறிந்த உண்மை. வரும் தேர்தலில் இந்த ஈவேரா ஈய ஆசிரியன் கட்டுமர கும்பல் தமிழர்கள் காதில் வழக்கம் போல் பூச்சுற்ற முடியாது. அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு முந்திக்கொண்டு விடும் ...இது தான் மக்களின் தீர்ப்பு. கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கொள்ளைக்காரர்கள் இடத்தை காலி செய்தே ஆக வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X