வேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு முதல்வரின் பதில் என்ன

Updated : செப் 25, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: 'மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:குடிமராமத்து திட்டத்திலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் கால்வாய் துார் வாரும் பணிகளிலும், ஊழல் அரங்கேறி உள்ளது.பிரதமரின் கிசான் திட்டத்திலும், லட்சக்கணக்கான போலிகளை சேர்த்து, நிதியை
வேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு

முதல்வரின் பதில் என்ன: ஸ்டாலின்

சென்னை: 'மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:

குடிமராமத்து திட்டத்திலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் கால்வாய் துார் வாரும் பணிகளிலும், ஊழல் அரங்கேறி உள்ளது.பிரதமரின் கிசான் திட்டத்திலும், லட்சக்கணக்கான போலிகளை சேர்த்து, நிதியை சுரண்டிய முதல்வர் இ.பி.எஸ்., விவசாயி என்று சொல்லி கொள்ள, எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.


ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்தில், ஊழல் செய்ய மாட்டார்; எந்த மனிதரும் தன் சொந்த வீட்டில் கன்னக்கோல் போட மாட்டார்.விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை இல்லாத வேளாண் சட்டங்களை, இரு சபைகளிலும், அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டு அளித்தது.
வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவாக, முதல்வர் பேசி வருகிறார் என்றால், அவர் உண்மையில் விவசாயியாக இல்லை; ஊரை ஏமாற்ற போட எத்தனிக்கும் உத்தமர் வேடமா?
தி.மு.க., விவசாய தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-செப்-202021:02:03 IST Report Abuse
RajanRajan திராவிடனே வுட்டுறாதே இதுலே கமிஷன் அடிச்சே ஆவணும். ஆமாம்...
Rate this:
Cancel
Balasubramanyan S - chennai,இந்தியா
24-செப்-202020:52:26 IST Report Abuse
Balasubramanyan S The persons who comment here doesnot know about the farm bill and its impact. 2.5 percent commission agents gone. They can't earn just sitting in house.does he know anything contract farming?now the commission agents and whole sale merchants are control on farmers and they dictate the price and now farmers cannot sell his produce of another person offer good price. They are more than Ambanis.I saw a visual in our tamil channel. Cauvery meetup kuzhu holding a play card that vivasaiyagal kovanathai uruvi Ambaniccu coat. But the same so called farmers are smart phones. Certainly many have Zio reliance sim.will they deny. In provisional shop you can see rice fro Karnataka, andra ponni. Where is tanjore ponni. First control these traders and talk.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
24-செப்-202017:12:36 IST Report Abuse
N.K என்ன பாதிப்பு என்று சுடலை முதலில் சொல்லட்டும்.
Rate this:
24-செப்-202019:25:44 IST Report Abuse
ஸ்டாலின் ::அத்தியாவசியப் பொருள்கள் தடைநீக்க திருத்தச் சட்டத்தின் மூலம் விளைபொருள்களை எங்கே வேண்டுமென்றாலும் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும் என்று அரசு சொல்கிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை அருகிலுள்ள உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கே கொண்டு சென்று விற்க முடியாதவர்கள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கொண்டு சென்று விற்பனை செய்வார்களா என்பதை யோசிக்க...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
24-செப்-202020:36:36 IST Report Abuse
N.K புதிய சட்டத்தில் அருகில் இருக்கும் உழவர் சந்தையில் விற்கக்கூடாது என்றில்லை. அருகில் உள்ள சந்தைகளில் மட்டுமே கிடைத்த விலைக்கு விற்கவேண்டும் என்று தலையெழுத்தா. தேவை அதிகம் இருக்கும் இடத்தில் விலை அதிகம் கிடைக்கும் அதை இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே விற்கவேண்டுமா?? இடைத்தரகர்கள் மட்டும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ஆந்திர, கர்நாடகாவில் விற்று லாபம் ஈட்டவேண்டும் அப்படித்தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X