சென்னை,: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE