அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம்: வலைதளங்களில் விறுவிறு

Added : செப் 24, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
 தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம்: வலைதளங்களில் விறுவிறு

சென்னை:'எல்லோரும் நம்முடன்' என்ற பெயரில் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. துவங்கியுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் இளம்பெண்ணின்புகைப்படத்துடன் 'காணவில்லை' என்ற தலைப்பில் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி என்பவர் காணாமல் போன தன் மகள் காயத்ரி பற்றி விளம்பரம் செய்திருப்பது போன்று சித்தரித்து உள்ளனர்.அதில் 'உயரமான அழகான 21 வயதுடைய என் அன்பு மகள் காயத்ரியை காணவில்லை. மீண்டும் வீட்டுக்கு வந்துவிடு. அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்' என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அதில் 'உன் இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டோம். உனக்கு பிடித்த வேலையையே எப்போதும் பார்க்கலாம். உன் இரண்டாவது கோரிக்கையான 'எல்லோரும் நம்முடன்' ஆன்லைன் திட்டம் மூலம் நம் குடும்பம் தி.மு.க.வில் சேர வேண்டும் என்பதும் நடந்து விட்டது. அத்திம்பேர் மன்னி குடும்பமும் சேர்ந்துள்ளனர். சீக்கிரம் திரும்பி வா' என கூறப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரியில் பார்த்தா முன்னாள் சங்கி - Partha_exsangee@gmail.com - என பெயரிட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

இணைய வழியிலான தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க இளைஞர்களை குறி வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால் இளைஞர்கள் பலரும் 'யூ டியூப் பேஸ்புக்' வீடியோக்களுக்கு நடு நடுவே வரும் இந்த விளம்பரத்தை பார்த்து கடுப்பாகி 'டிரம்ப்' 'சூனா பானா' 'விபரமறியா வாரிசு' என்ற பெயர்களில் எல்லாம் அடையாள அட்டை வாங்கி 'மீம்ஸ்' போட்டு கிண்டல் அடிக்கின்றனர்.
மேலும் காணவில்லை விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது ஆந்திர மாடலிங் பெண் அனகாவின் படமாகும். தனக்கு தெரியாமல் தன் போட்டோ பயன்படுத்தப்பட்டது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.'இந்த விளம்பரத்தில் நான் பங்கேற்கவில்லை. என் போட்டோவுடன் வந்த விளம்பரம் எந்த பத்திரிகையில் வந்துள்ளது என்பதும் எனக்கு தெரியாது.

இதை கண்டுபிடித்து எனக்கு தகவல் தந்தால் போலீசில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்' என தன் முகநுால் பக்கத்தில் அனகா பதிவிட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய இந்த விளம்பரம் தி.மு.க.வின் தேர்தல் வியூக நிறுவனமான 'ஐபேக்' தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதா அல்லது வேறு கட்சிகளின் வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenaksisundaram N S - bangalore,இந்தியா
26-செப்-202006:20:17 IST Report Abuse
Meenaksisundaram N S ப்ராஹ்மண சமூகத்தின் சாபம் தான் கடோசிலே திமுகவை thorkkadikkappokiradhu.
Rate this:
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
24-செப்-202020:19:40 IST Report Abuse
Ganesan.N தி.மு. க. வெற்றி பெற வேண்டுமென்றால் குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து அவர்கள் செய்யும் விளம்பரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
24-செப்-202019:27:10 IST Report Abuse
Ashok Subramaniam திட்டறத்துக்கும் பிராமணர்கள். ஓட்டு வாங்கவும் பிராமணர்கள் ஆஹா.. என்ன அற்புதமான சிந்தனை இந்த திருடர் முன்னேற்றக் கழகத்துக்கு.. இந்த குசும்பின் உச்சம்.. அந்த குட்டியூண்டு ஈ-மெயிலில் இருப்பதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை.. exsangee@gmail.com-யாம். எத்தனைத் தரமில்லாத சிந்தனை இந்த பக்கி, சொங்கி, மக்குத் திருட்டுத் திராவிடக் கட்சிகளின் குறுக்கு மூளை இப்படித்தான் யோசிக்கும் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X