கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உரிமைக்குழு நோட்டீசுக்கு தடை: தி.மு.க., வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (10+ 4)
Share
Advertisement
Chennai,D.M.K,DMK,சென்னை,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், GUTKASCAM, CHENNAIHIGHCOURT, HIGHCOURT, GUTKA. SATHYANARAYANA, JUSTICESATHYANARAYANA,குட்காவழக்கு, சென்னைஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னைஉயர்நீதிமன்றம், நீதிபதி, நீதிபதிசத்தியநாராயணா, குட்கா, ஐகோர்ட்,

சென்னை : எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்காவை, சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக, ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக்குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். 'உரிமைக்குழு அனுப்பிய, நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது' என, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இதையடுத்து, செப்., 7ம் தேதி உரிமைக்குழு கூடியதன் அடிப்படையில், அன்றே சட்டசபை செயலர் மீண்டும், நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்ட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, 'ஏற்கனவே, தலைமை நீதிபதி அமர்வில், உரிமை மீறல் இல்லை என தெளிவுபடுத்தி விட்டது. இந்த உத்தரவை, உரிமைக்குழு பரிசீலித்திருக்க வேண்டும். அதே காரணத்துக்காக மீண்டும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.


latest tamil news


மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ''எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக, உரிமைக்குழு தலைவர் அவதுாறு வழக்கு தொடுத்துள்ளார். அதனால், அவரது தலைமையிலான குழுவின் அதிகார வரம்பு பற்றி கேள்வி எழுப்புகிறோம்,'' என்றார்.

அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடியதாவது:எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக தான், உரிமைக்குழு தலைவர் வழக்கு தொடுத்துள்ளார். அவரை தவிர்த்து, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். குழுவின் முன் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது; மனுதாரர்கள் ஆஜராகவில்லை. உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய அடிப்படை தவறு நீக்கப்பட்டு, புதிதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு பதில் அளிக்க, 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டியதில்லை. எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்கிறோம். உரிமைக்குழுவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது; சபாநாயகர் தான் உத்தரவிட வேண்டும். சட்டசபையும் இப்போது கூடவில்லை. அதனால், இந்த கட்டத்தில் தடை விதிக்க தேவையில்லை.இவ்வாறு, அவர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சத்தியநாராயணா, இன்று(செப்., 24) இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை, இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு: மறுஉத்தரவு வரும் வரை, 2வதாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில், சபாநாயகர், பேரவை செயலர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
24-செப்-202016:14:41 IST Report Abuse
Baskar கட்டுமர விசுவாசி என்றால் இன்னும் புரியலையா உங்களுக்கு. அந்தக்காலத்து விசுவாசம் இப்போது பயன்படுகிறது என்பதை தான் ஆர்.எஸ் பாரதி முதலிலேயே சொல்லி விட்டாரே.
Rate this:
Cancel
24-செப்-202014:09:31 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) அது என்னப்பா தீய மு க விற்கு எதிராக ஒரு தீர்ப்பு கூட வர மாட்டுகிறது ??? அவங்க எல்லாம் நல்லவர்கள் /உத்தமர்கள் என்று கூறி விடாதீங்க ???? நல்லவன் /உத்தமர்களுக்கு மாபெரு கேவலம் இது ...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
24-செப்-202015:02:00 IST Report Abuse
vadiveluவிசுவாசம்தான்....
Rate this:
24-செப்-202015:35:50 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு எல்லோருக்கும் ... கிடைப்பார்களா என்ன...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-செப்-202013:43:08 IST Report Abuse
Anand நாட்டில் கொலை கொள்ளை நடப்பதாக கூறி சம்பந்தப்ட்டவைகளை சட்டசபைக்கு கொண்டுவரலாமா யுவர் ஹானர்?
Rate this:
24-செப்-202014:57:09 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அப்போ அந்த குட்கா காரன் எவென் எவனுக்கு எவ்வளவு கோடி என்றானே அந்த வழக்கு ஏன் தூங்குது உனக்கும் கவனித்தார்களா என்ன நீ சப்போர்ட் பண்ற...
Rate this:
Anand - chennai,இந்தியா
24-செப்-202016:02:21 IST Report Abuse
Anandஇவன் யார்ரா எப்பப்பாத்தாலும் கூத்துலே கோமாளி போல் வந்து கடுப்பேத்தறான்.. இந்த லட்சணத்தில் போலி பெயர் வேறு...என்ன ஜென்மமோ....
Rate this:
24-செப்-202018:43:41 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஓ நீ க்கூத்து பார்ட்டியா அடேடே தெரியாம போச்சே KORRANNA வுக்கு பயந்து கிராமத்தில் இருந்து இங்கு ஓடி வந்த வரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X