அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்: விசாரணை நடத்த ரஷ்யா முடிவு

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020
Share
Advertisement

மாஸ்கோ: அலெக்சி நவால்னி 32 நாட்களுக்குப் பின் ஜெர்மனி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news



ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.


latest tamil news



இந்நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ''அலெக்சி ரஷ்யாவுக்குத் திரும்ப வந்தால், மற்ற ரஷ்யக் குடிமக்களைப் போல் சுதந்திரமாக இருப்பார்,'' என, நேற்று தெரிவித்தார்.


latest tamil news



'மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி, 32 நாட்களுக்குப் பிறகு குணமடைந்தார். இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அலெக்சி முழுவதுமாக விரைவில் குணமடைவார்' என, பெர்லினில் உள்ள மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், அலெக்சி நவால்னி ரஷ்யா வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X