‛கொரோனா பரவலை மூடிமறைக்க சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு உடந்தை'

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
CoronaVirus, ChineseVirologist, WHO, PartOf_CoverUp, உலக சுகாதார அமைப்பு, சீனா, கொரோனா, வைரஸ், வைராலஜிஸ்ட்

வாஷிங்டன்: சீன அரசாங்கம் கொரோனா பரவுவதைப் பற்றி அறிந்திருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அதை மூடிமறைப்பதாகவும் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வைராலஜிஸ்ட்டான லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வைராலஜிஸ்ட் லி மெங் யான், ஹாங்காங்கின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் பணிபுரியும்போது, டிசம்பர் 31 அன்று வூஹானில் பரவும் ஒரு புதிய ”சார்ஸ்” ரக வைரஸ் பற்றி விசாரிக்குமாறு அவரது மேற்பார்வையாளர் அவரிடம் கேட்டிருந்ததாகவும், பின்னர் அவரது முயற்சிகள் தடைபட்டதாகவும் கூறியிருந்தார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிந்ததும், உடன் பணிபுரிபவர்கள் தன்னிடம், "கவனமாக இருந்துகொள்ளுங்கள்" என்று எச்சரித்ததாகவும் கூறினார். மேலும், இந்த வைரஸ், வூஹான் நகரத்திலுள்ள ஒரு வைராலஜி ஆய்வகத்திலிருந்து வந்தது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.


latest tamil news


இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய அவர், சீன அரசாங்கம் கொரோனா பரவுவதைப் பற்றி அறிந்திருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அதை மூடிமறைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛தொற்றின் தொடக்கப் புள்ளியாக வூஹான் மார்கெட் கருதப்படுவது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சூழ்ச்சி. சீன அரசாங்கம் சமூக ஊடகங்கள் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறது. சீனாவிலுள்ள எனது குடும்பத்தை அச்சுறுத்துகிறது,' என்றார். இதற்கிடையே யானின் டுவிட்டர் கணக்கு சமீபத்தில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
24-செப்-202022:39:07 IST Report Abuse
vivek c mani கம்யூனிசத்திற்கு எதிராக கருத்துக்கள் கூறினால் ட்வீட்டர் உடனே அந்த கணக்கை மூடிவிடும். இந்தியாவில் ஹிந்துக்களுக்கு எதிராக பேசினால் அது நல்ல ஆதரவு பெரும். மத்திய அரசுக்கு எதிராக குறிப்பாக பிரதம மந்திரிக்கு எதிராக பேசினால் அவர்களுக்கு ட்விட்டரில் அப்ரூவல் டிக் கொடுக்கப்படும். ஆனால் செகுலர்வாதிகள் பற்றி ஏதும் எழுதினால் அது பிளாக் செய்யப்படும் இல்லையெனில் ட்வீட்டர் கணக்கே முடக்கப்படும். இதுதான் ட்வீட்டர் பறையறிவிக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-செப்-202019:01:26 IST Report Abuse
Rajagopal சீனர்களும், மற்ற ஆசிய மக்களும், பாம்பு, வவ்வால், முதலை என்று பல வகை விலங்கினங்களை பல காலமாக உண்டு வருகிறார்கள். இது புதிதல்ல. திடீரென்று வவ்வால் தின்றதால் இந்த வைரஸ் மனிதர்களுக்குள் புகுந்து விட்டது என்று கதை காட்டுகிறார்கள். வூஹானில்தான் இந்த கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் மய்யம் இருக்கிறது. நிச்சயமாக சீனா ஒரு பயோ ஆயுதம் தயாரித்து வந்திருக்கிறது. அது அவர்களது முகத்திலேயே வெடித்து அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. இது மட்டும் வெளிப்படாமல் இருந்திருந்தால், சீனா எந்த நாட்டையும் ஒரு தோட்டா இல்லாமல் வீழ்த்த முடியும். அந்தக் குறிக்கோளை நோக்கித்தான் சீனா ஆராய்ச்சி செய்து வந்துள்ளது. இப்போது அதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-செப்-202016:34:27 IST Report Abuse
S. Narayanan உலக நாடுகள் சேர்ந்து சீனாவை ஒடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X