வேளாண் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசு சட்ட ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேளாண் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசு சட்ட ஆலோசனை

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (25)
Share
திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என, சட்டத்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்,

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என, சட்டத்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


latest tamil news




மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய சட்ட அமைச்சகத்தைக் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news



கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், 'மத்திய அரசு வேளாண் மசோதாக்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. கடந்த 6 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். 2019ம் ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக குரல் கொடுத்த 8 எம்.பி.,க்களையும் மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' எனப் பதிவிட்டிருந்தார்.



latest tamil news



திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறுகையில், ''கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என, ஆராய்வது அவசியம். அதனால், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்,'' எனத் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X