"சீனாவுக்கு ஓடுங்க பரூக்...." - நெம்பி எடுக்கும் நெட்டிசன்கள்

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (93) | |
Advertisement
ஸ்ரீநகர் : "காஷ்மீர் மக்கள் தங்களை யாரும் இந்தியர்களாக நினைக்கவில்லை, மாறாக சீனா வந்தால் கூட பரவாயில்லை என்ற மனநிலையில் தான் உள்ளனர்" என முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் அவரை தீட்டி தீர்க்கின்றனர். "நீங்கள் வேண்டுமானால் சீனாவுக்கு ஓடுங்க" என அவரை வசை பாடுகின்றனர். இதனால் சமூகவலைதளத்தில் அவரின்
FarooqAbdullah, Kashmiris, China,

ஸ்ரீநகர் : "காஷ்மீர் மக்கள் தங்களை யாரும் இந்தியர்களாக நினைக்கவில்லை, மாறாக சீனா வந்தால் கூட பரவாயில்லை என்ற மனநிலையில் தான் உள்ளனர்" என முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் அவரை தீட்டி தீர்க்கின்றனர். "நீங்கள் வேண்டுமானால் சீனாவுக்கு ஓடுங்க" என அவரை வசை பாடுகின்றனர். இதனால் சமூகவலைதளத்தில் அவரின் கருத்து டிரண்ட் ஆனது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்டது. இதை வைத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என மத்திய அரசு அங்கு தொடர்ந்து ராணுவம் மூலம் கண்காணித்து வருகிறது. அதேசமயம் அங்கு பல்வேறு தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒரு பேட்டியில், "உண்மையை சொல்கிறேன். மத்திய அரசு காஷ்மீரில் வசிக்கும் வசிக்கும் மக்களிடம் யாரிடம் வேண்டுமானால் போய் கேட்கட்டும், அவர்கள் தங்களை இந்தியர்களாக நினைக்கவில்லை. இது தான் அங்குள்ள நிலை. காரணம், இந்த அரசின் மீது அவர்கள் கொண்டுள்ள விரக்தியே காரணம். அதேசமயம் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று நினைக்கவில்லை. அதையும் தெளிவுப்படுத்துகிறேன்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் செல்லவில்லை. காந்தி வழியில் இந்தியாவில் இணைந்தனர். ஆனால் இப்போது மோடியின் வழியில் இந்தியாவில் இருப்போம் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். சீனாவில் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என இங்குள்ள மக்கள் அறிவர். ஆனாலும் இப்போது இருக்கும் சூழலுக்கு சீனா கூட காஷ்மீருக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலையில் தான் காஷ்மீர் மக்கள் உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்லையில் இந்திய - சீனா இடையே ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்ட சூழலில் பரூக்கின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் கருத்து சமூகவலைதளத்தில் டிரண்ட் ஆனது. இவரின் கருத்திற்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பரூக்கிற்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் கீழே...

"முதலில் பரூக் அப்துல்லாவை சீனாவிற்கு அனுப்பி வையுங்கள். ஒருவேளை இந்திய - சீனா இடையே போர் ஏற்பட்டால் முதலில் சீனாவுக்கு ஓடுவது அவராகத்தான் இருக்கும். 1991ல் இவர் லண்டன் ஓடியது அனைவருக்கும் நினைவு இருக்கும் என நினைக்கிறேன்" ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவரோ, "பரூக் எப்போது சீன அரசின் குடியுரிமையை வாங்கினார்" என தெரிவித்துள்ளார்.


latest tamil news
இன்னொருவர், "எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு கட்டமைப்புகளை நிறுவி வருவதாக செய்தி வருகிறது. இங்கு பரூக், காஷ்மீரில் சீனா ஆளட்டும் என்கிறார். அவருக்கு இங்குள்ள மக்களை பற்றி கவலையில்லை, தான் எப்போது ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், "யார் யாருக்கு தாங்கள் இந்தியர் இல்லை என்ற நினைப்பு வருகிறதோ, தயவு செய்து இந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த ஒருவர், "அன்புள்ள ஓமர் அப்துல்லாவிற்கு. உங்கள் அப்பாவின் வாட்ஸ் அப் நம்பர்என்னிடம் இல்லை. ஆகவே தயவு செய்து இந்த செய்தியை அவருக்கு சொல்லிவிடுங்கள். நான் காஷ்மீர்காரன் தான். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் எங்கு இருக்க வேண்டும் என்பதை என் சார்பாக கூற பரூக் அப்துல்லாவாகிய உங்களுக்கு உரிமை இல்லை". என தெரிவித்துள்ளார்.

இதுபோன்று ஏராளமான கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பரூக் அப்துல்லாவிற்கு எதிராக பதிவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
27-செப்-202013:06:45 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan பாரூக் அப்துல்லாஹ் பொதுமக்கள் பண்டிட் கொலைகளுக்காக ஐ ந சபையில் தூக்கில் போடவேண்டும்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
01-அக்-202014:23:17 IST Report Abuse
Sathya Dhara பண்டிட்களை கொலை செய்த பாவத்திற்கு.....இவனது கும்பலையே கண்ட துண்டமாக வெட்டி நாய் நெறிகளுக்கு உணவாகப்போட சௌகரியமாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்....
Rate this:
Cancel
26-செப்-202019:47:56 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு சீன ஒரு சாக்கடை
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-செப்-202014:23:23 IST Report Abuse
r.sundaram காஷ்மீரில் பிரச்சனை என்றால் லண்டனுக்கு ஓடி ஒளியும் அப்துல்லா தன்னை ஒருபோதும் இந்தியனாக எண்ணியது இல்லை. ஆனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வேண்டும், மத்திய அமைச்சர் பதவி வேண்டும், ஆனால் தான் இந்தியன் என்ற எண்ணம் துளியும் கிடையாது. இவர் இந்தியாவை எதிர்த்து பேசியதும் உண்டு. முதலில் இவரை நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X