பொது செய்தி

இந்தியா

மூன்றாம் நபருக்கு தகவல் தருவதா? சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்!

Updated : செப் 26, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு : 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், என்னைப் பற்றிய விபரங்களை, மூன்றாம் நபருக்கு தரக்கூடாது' என, பெங்களூரு சிறை கண்காணிப்பாளருக்கு, சசிகலா கடிதம் எழுதிஉள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை, சசிகலா, கடிதம்

பெங்களூரு : 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், என்னைப் பற்றிய விபரங்களை, மூன்றாம் நபருக்கு தரக்கூடாது' என, பெங்களூரு சிறை கண்காணிப்பாளருக்கு, சசிகலா கடிதம் எழுதிஉள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


வாய்ப்பு


இதனையடுத்து, 'சசிகலா எப்போது விடுதலையாவார்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, கர்நாடக சிறை நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். அதற்கு, பெங்களூரு சிறை நிர்வாகம் அளித்த பதிலில், 'அபராத தொகையான, 10 கோடி ரூபாயை செலுத்திவிட்டால், அடுத்த ஆண்டு, ஜனவரி 27ல், சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதைத் தொடர்ந்து, சசிகலா விடுதலை தொடர்பாக, சிறை கண்காணிப்பாளரிடம், நரசிம்ம மூர்த்தி கூடுதல் தகவல்களை கேட்டிருந்தார்.

இந்நிலையில், தன் விடுதலை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளருக்கு, சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: என் விடுதலை மற்றும் தண்டனை விபரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்டு, பல்வேறு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக அறிகிறேன். விளம்பரம் தேடுவது, அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, இது போன்று தகவல்கள் கேட்டுள்ளனர்.
சட்டரீதியாக நான் விடுதலை செய்யப்படும் உரிமையைத் தடுக்கும் நோக்கிலும், சிலர், அவ்வாறு தகவல்களைக் கேட்கின்றனர்.


மறுப்பு


தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அடிப்படை உரிமையாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், என் தண்டனைக் காலம், விடுதலை உள்ளிட்ட விபரங்கள் குறித்து, மூன்றாவது நபருக்கு தகவல் அளிப்பது, என் தனிப்பட்ட
தகவல்கள் பாதுகாப்பு உரிமையை மீறும் செயல்.

எனவே, என் தண்டனைக் காலம், விடுதலையாகும் நாள் உள்ளிட்ட எந்த விபரங்களையும், மூன்றாவது நபருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கூடாது. இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, சசிகலா விடுதலை தொடர்பாக, நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த தகவல்களை தெரிவிக்க, சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25-செப்-202017:24:07 IST Report Abuse
Loganathaiyyan ஆமா உன் வியாபாரம் என்ன தொழில் என்ன வீடியோ காஸ்செட் வாடகை கொடுத்து 3.5 லட்சம் கோடி சம்பாதிக்க முடியுமா எப்படி மூன்றாம் நபர் வைத்து தானே அப்போ மூன்றாம் நபர் கேள்வி கேட்டால் அப்போ அதுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இவள் கேட்பதும் ஒரு வகையில் சரியே ஏன் நான் ரூ 3 கோடி லஞ்சம் கொடுத்தேனெ அப்படியுமா நான் சொல்ற படி எல்லாம் ஏன் கேட்கக்கூடாது என்று???
Rate this:
Cancel
man -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202016:15:36 IST Report Abuse
man intha Amma England illavarasiya appdeya chindambara ragasiyam DMK achivanthal theriyum unga nelamaii
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25-செப்-202007:35:26 IST Report Abuse
Svs Yaadum oore //...மூன்றாவது நபருக்கு தகவல் அளிப்பது...//...மூன்றாம் நபர் சொத்தையெல்லாம் அடித்து பிடிங்கின குற்றவாளிக்கு இதை பற்றி பேச என்ன உரிமை இருக்குது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X