மூத்த அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா தொற்றால் காலமானார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூத்த அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா தொற்றால் காலமானார்

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (2)
Share
கொல்கத்தா: அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் சேகர் பாசு இன்று (செப்., 24) கொரோனா தொற்றால் காலமானார்.அரசு பள்ளியில் படித்து, பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி சேகர் பாசு. இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்தின், மிகவும் சிக்கலான உலையை உருவாக்கியதில் முன்னோடி இவர். 2015 முதல் 2018 வரை இந்திய அணுசக்தி
senior, nuclear scientist, sekar basu, corona, died, மூத்த அணு விஞ்ஞானி, சேகர் பாசு, கொரோனா, காலமானார்

கொல்கத்தா: அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் சேகர் பாசு இன்று (செப்., 24) கொரோனா தொற்றால் காலமானார்.

அரசு பள்ளியில் படித்து, பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி சேகர் பாசு. இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்தின், மிகவும் சிக்கலான உலையை உருவாக்கியதில் முன்னோடி இவர். 2015 முதல் 2018 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு 2014-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்து அரசு கவுரவித்துள்ளது.


latest tamil news



இந்த நிலையில் இன்று அவர் கொரோனா தொற்றால் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். “மூத்த விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் சேகர் பாசுவின் மறைவு தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிஹந்திற்கு மகத்தான பங்களிப்பு செய்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்” என்று கூறியுள்ளார் ஜனாதிபதி.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X