அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பா; அடியோடு நீக்கமா? 29ல் ஆலோசனை

Updated : செப் 26, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கை, அடுத்த மாதமும் நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என, மருத்துவ நிபுணர் குழுவினருடன், வரும், 29ம் தேதி, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் அறிவுரைப்படி,
Lockdown,curfew,TNCoronaUpdates,TNHealth,TNFightsCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu

சென்னை: தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கை, அடுத்த மாதமும் நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என, மருத்துவ நிபுணர் குழுவினருடன், வரும், 29ம் தேதி, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் அறிவுரைப்படி, தளர்வுகளை அறிவித்து வருகிறார்.

இம்மாதம் முதல், பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. பஸ், ரயில், மெட்ரோ ரயில் போன்றவை இயக்கப்படுகின்றன.மின்சார ரயில் மட்டும் இயக்கப்படவில்லை. அதையும் விரைவில் இயக்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.

தற்போது கடைகள், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் நேரத்தை நீட்டிக்க வேண்டும். மூடிக் கிடக்கும் மார்க்கெட்டுகளை திறக்க, அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருமணத்தில், 50 பேர்; இறுதி சடங்கில், 25 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஐந்து பேருக்கு மேல், பொது இடங்களில் கூடவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி, தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு, இம்மாதம், 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிக்காமல், ஏற்கனவே இருந்த அளவிலேயே உள்ளது.

இந்த சூழ்நிலையில், அடுத்த மாதம், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது முழுமையாக தளர்த்திவிடலாமா என்பது குறித்தும், நோய் பரவலை முற்றிலுமாக தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும், 29ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.அன்றைய ஆலோசனைக்கு பின், ஊரடங்கு நீட்டிப்பா அல்லது முழுதும் தளர்வா என்பதை, முதல்வர் அறிவிப்பார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-செப்-202021:03:42 IST Report Abuse
A.Gomathinayagam கட்டுபாடுகளுடன் பழைய நிலைக்கு திரும்புவதே பொருளாதாரத்தை மீட்கும் ஒரே வழி
Rate this:
Cancel
25-செப்-202013:29:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு கண்டிப்பா பழனி நீக்கமாட்டார் இது அவருக்கு வசதியா உள்ளது ஏன் எனில் போராட முடியாது, இவர் மட்டும் நல திட்டம் என்கிற போர்வையில் அரசியல் சாகசம் செய்யலாம் அப்புறம் என்ன எல்லாம் திறந்து விட்டார்கள் இன்னும் TRAIN மட்டும் தான் அப்புறம் என்ன
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
25-செப்-202010:06:46 IST Report Abuse
veeramani திரை அரங்குகள் தற்போது வேண்டவே வேண்டாம். மாணவர்கலின் பெற்றோர் நிம்மதியுடன் உள்ளனர். மேலும் ரயில்வே சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். தமிழக மக்கள் கிட்டத்தட்ட அனைவரும் மாஸ்க் அணிந்துதான் வெளிவருகின்றனர் எனவே அம்மாவின் அரசு இன்னும் தளர்வுகளை அறிவிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X