டில்லி வன்முறை வழக்கு சல்மான் குர்ஷித் சேர்ப்பு

Added : செப் 24, 2020
Share
Advertisement
புதுடில்லி:டில்லி வன்முறை வழக்கில், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், பிப்.,யில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குற்றப்பத்திரிகைஅதில், 53 பேர் உயிரிழந்தனர்;
 டில்லி வன்முறை வழக்கு சல்மான் குர்ஷித் சேர்ப்பு

புதுடில்லி:டில்லி வன்முறை வழக்கில், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், பிப்.,யில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குற்றப்பத்திரிகைஅதில், 53 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், 17 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, நீதிமன்றத்தில், டில்லி போலீசார் தாக்கல் செய்தனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் குறித்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அதன் படி, வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தின் பெயர், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரின் பெயர்களும், அதில் இடம்பெற்று உள்ளன.


நடவடிக்கை



சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, சல்மான் குர்ஷித் கூறியதாவது:நான் வன்முறையை துாண்டும் வகையில் பேசியது உண்மையாக இருந்தால், அது தொடர்பாக, போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? வன்முறையை துாண்டும் வகையில் என்ன பேசினேன் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X