பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 1ல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின், அக்டோபர், 1 முதல் பள்ளிகளைத் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்களை, இரு குழுவாக பிரித்து, வாரத்தில்மூன்று நாட்கள் மட்டும் பாடங்கள் நடத்த, பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.கொரோனா வைரஸ் தொற்றால், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு,
அக்., 1ல் தமிழக அரசு பள்ளிகள் திறக்க...

சென்னை : தமிழகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின், அக்டோபர், 1 முதல் பள்ளிகளைத் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மாணவர்களை, இரு குழுவாக பிரித்து, வாரத்தில்மூன்று நாட்கள் மட்டும் பாடங்கள் நடத்த, பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.கொரோனா வைரஸ் தொற்றால், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச்சில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், பள்ளியில் வகுப்புகளை நடத்துவதற்கு, அக்டோபர், 1 முதல், அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர்சண்முகம் நேற்று பிறப்பித்த உத்தரவு:

செப்டம்பர், 21 முதல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பள்ளிக்கு வரவழைத்து, வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைத்து, உரிய வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித்துறை அனுமதி கோரியது. அதன்படி, அக்., 1 முதல், அனுமதி அளிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் அனுமதி கிடையாது. பெற்றோர் மற்றும் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே, மாணவர்கள், பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், 50 சதவீதம் என்ற அளவில், பணிக்கு வர வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


2 குழுக்கள்; 3 நாள் வகுப்புபள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் விபரம்:

* மாணவர்களை, இரண்டு குழுக்களாக பிரிக்க வேண்டும். ஒரு குழுவுக்கு, திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளிலும்; மற்றொரு குழுவுக்கு, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டும்.மற்ற நேரங்களில், 'ஆன்லைன்' வகுப்புகளை தொடரலாம்

* சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், அரசு விதிமுறைப்படி தனிமைப்படுத்தும் நாட்களை கடந்த பின், பள்ளிக்கு வர வேண்டும்.வானிலை சரியாக இருந்தால், வகுப்பறைக்கு வெளியே, திறந்தவெளியை பாதுகாப்புடன் பயன்படுத்த லாம்

* பள்ளிகளில், நீச்சல் குளம் திறக்கப்படக் கூடாது. 'பயோமெட்ரிக்' வருகை பதிவை பயன்படுத்தக் கூடாது. 'ஏசி' வசதியை பயன்படுத்தக் கூடாது. விளையாட்டுகளின் போது கூட்டம் கூடக் கூடாது. மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்களை, கிருமி நாசினியால் சுத்தம் செய்து, சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்* மாணவர்கள் தொடும் இடங்கள், பயன்படுத்தும் இடங்களில், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்து வைக்க வேண்டும்; கைகளை கழுவ தண்ணீர் வசதி வேண்டும்.


இருமல், தும்மல்* மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சுத்தமான முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். முகங்களை தொடுவது கூடாது. தும்மல், இருமல் வந்தால், ஒரு முறை பயன்படுத்தப்படக் கூடிய, 'டிஷ்யு பேப்பரால்' துடைத்து, குப்பையில் போட வேண்டும்
* நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பத்தை சோதிக்க, தொடாமல் பயன்படுத்தும் வெப்பமானியை பயன்படுத்த வேண்டும். 37.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மேல் வெப்பநிலை காட்டும் மாணவர்களை, பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது.அவர்களை, மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.


காய்ச்சலா?தனி அறை!மாணவர் யாருக்காவது, காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக, பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதுவரை, தனி அறையில் வைத்திருக்க வேண்டும். அவர்களை முகக் கவசம் அணிந்திருக்க செய்ய வேண்டும்.அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் அளிக்க வேண்டும். அந்த வளாகம் முழுதும், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


ஆசிரியர்களுக்கு சுழற்சிப் பணி!ஆசிரியர்களில் ஒரு குழுவினர், திங்கள், செவ்வாயும்; இன்னொரு குழுவினர், புதன், வியாழனும் பள்ளிக்கு வர வேண்டும். பின், முதல் குழு, வெள்ளி, சனி என்றும், அடுத்த நாட்களில், அடுத்த குழு என்றும், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பணியாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பேனா, பென்சில் இரவல் கூடாது!* ஆய்வகங்களில், கருவிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தியதும், மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் கூடி நிற்கக் கூடாது. அனைவரும் அடையாள அட்டை அணிவது அவசியம்* தேவையின்றி வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. நோட்டுப் புத்தகம், பென்சில், பேனாக்கள், அழிப்பான், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை, மாணவர்கள் பரிமாற கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-செப்-202009:09:38 IST Report Abuse
Sampath Kumar ரைட்டு சனி பெயர்ச்சி ஆகுது அப்புறம் தான் இருக்கு வேடிக்கை
Rate this:
Cancel
25-செப்-202014:48:51 IST Report Abuse
Dhandapani R எப்டியும் ஆல்பாஸ் தானே யாருக்காக இந்த ரிஷ்க்
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202014:03:02 IST Report Abuse
Diya If possible, wherever there are hostels inside and nearby schools and colleges, they can make the children stay and learn for some days instead of going and coming from home. Might or might not work depending upon students, parents, teachers, facilities, etc. Students should be in regular contact with parents on those days.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X