கலாசார குழுவை கலைக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை| Dinamalar

கலாசார குழுவை கலைக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Added : செப் 24, 2020 | கருத்துகள் (1)
Share
'தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், இந்திய கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், 30க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், கையெழுத்திட்டு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய

'தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், இந்திய கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், 30க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், கையெழுத்திட்டு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய கலாசாரத்தின் பாரம்பரியம், மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து, 12 ஆயிரம் ஆண்டு களுக்கு பின்னோக்கி சென்று, ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக, ஒரு நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.

நம் நாடு, பன்முகத்தன்மை உடையது. பெருமை மிக்க மரபு வழியைக் உடைய இந்த நாட்டின் கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமெனில், அதற்கு உறுதியான ஆழமான தரவுகள், அவசியம்.ஆனால், இதற்கான வாய்ப்பு, கலாசார ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இல்லை. தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என, எந்தத் தரப்புக்குமே, பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இந்த பிரச்னையில், தாங்கள் தலையிட்டு, மத்திய அரசு அமைத்துஉள்ள இந்தக் கலாசார ஆய்வுக் குழுவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X