அ.தி.மு.க., அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்?'

Updated : செப் 26, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (47)
Share
சென்னை : 'அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என, பாராட்டும் நிர்ப்பந்தம், பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:'அ.தி.மு.க., அரசு, கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதிலும், நோய் தொற்றை குறைப்பதிலும், சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என, பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது, ஆச்சரியம்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : 'அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என, பாராட்டும் நிர்ப்பந்தம், பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது அறிக்கை:

'அ.தி.மு.க., அரசு, கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதிலும், நோய் தொற்றை குறைப்பதிலும், சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என, பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது, ஆச்சரியம் அளிக்கவில்லை; அதிர்ச்சியும் அளிக்கவில்லை.ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என, நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், கொரோனா நோய் தொற்றை தடுக்க முடியாமல், 'எப்போது கொரோனா குறையும் என்பது, கடவுளுக்குத் தான் தெரியும்' என, கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, முதல்வர் கைவிரித்து விட்டார்.

பின், அவர் தலைமையிலான அரசு, சிறப்பான நடவடிக்கை எடுத்திருக்கிறது என, பாராட்டும் நிலையும், நிர்பந்தமும், பிரதமருக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.


பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய உளவுத் துறை வாயிலாக, ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டு, அ.தி.மு.க., அரசின் கொரோனா படுதோல்விகளையும், கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழக மக்கள் நலன் மீது, பிரதமருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கும் என, நம்புகிறேன். எனவே, கூட்டணி கட்சி என்ற, குறுகலான எல்லையை கடந்து வந்து, அகன்று விரிந்திருக்கும் நாட்டின் பிரதமராக, அ.தி.மு.க., அரசின் பலமுனைத் தோல்விகளை தெரிந்து கொள்ள
வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


சுபஸ்ரீ பெற்றோர் நன்றி


தி.மு.க., தலைமையக அறிக்கையில், 'சென்னை, வேளச்சேரி பகுதியில், அ.தி.மு.க., கட்சி பேனர் விழுந்து, பலியான சுபஸ்ரீயின் பெற்றோர், நேற்று அறிவாலயத்தில், ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, சட்ட ரீதியாக, இந்தப் பிரச்னையை வெளியில் கொண்டு வர, தி.மு.க., துணை நின்றதற்கு நன்றி தெரிவித்தனர்' என, கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் மற்றொரு அறிக்கையில், 'தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். 'அவர், விரைவில், முழு நலம் பெற வேண்டும். பொதுப்பணியில் மீண்டும், முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்' என, கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X