நாட்டில் ஊரடங்கு துவங்கி 6 மாதங்கள் நிறைவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாட்டில் ஊரடங்கு துவங்கி 6 மாதங்கள் நிறைவு

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.சீனாவில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவத் துவங்கியது. கடந்த, மார்ச், 24ம் தேதி, 'டிவி'யில் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அப்போது, 500க்கும்
coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,lockdown,quarantine,curfew,india,coronavirus,covid19

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவத் துவங்கியது. கடந்த, மார்ச், 24ம் தேதி, 'டிவி'யில் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அப்போது, 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது. அதில், 12 பேர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு அமலுக்கு வந்து, ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 57.32 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 91 ஆயிரத்து, 149 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில், அதிக பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது: நாடு முழுதும், கொரோனா வைரஸ் மறைந்துள்ளது. அதிக பரிசோதனை செய்யும் பகுதிகளில், அதன் தாக்கம் தெரிய வருகிறது. கிராமம் - நகரம், ஏழை - பணக்காரன் என, எந்த பேதமும் இல்லாமல், இந்த வைரஸ் வேகமாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆறு மாதங்களில், அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் வேகம் எடுத்துள்ளன. ஆனால், வைரஸ் பரவல் குறையவில்லை. அடுத்த, இரண்டு மாதங்களில், இதன் தாக்கம் குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X