புதுடில்லி : பீஹாரில் அக்.,28, நவ., 3 மற்றும் 7 ம் தேதியில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கும் எனவும், நவ.,10ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தல் தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது:
*243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபையின் பதவிக்காலம் 29 நவ., 2020 அன்றுடன் நிறைவு பெறுகிறது.
*80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் ஓட்டுப்போட அனுமதி
*வீடு, வீடாக பிரசாரம் செய்ய செல்லும் அரசியல் கட்சியினர் 5 பேரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்
* தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை நடக்கும்.
* ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

* கொரோனா காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ள நோயாளிகள், தேர்தலின் கடைசி நாள் அன்று, தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் ஓட்டுப்போடலாம். அவர்களும் தபால் மூலம் ஓட்டுப்போடலாம்
*16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
* பீஹார் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடக்கும்
*அக்., 28, நவ.,3 மற்றும் 7 ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கும்.
* தேர்தலில் பதிவான ஓட்டுகள் நவ.,10 அன்று எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE