அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.,பாலசுப்பரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு
SPB, எஸ்பிபி, பாலசுப்ரமணியம், காலமானார், அஞ்சலி

சென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.,பாலசுப்பரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று (செப்.,25) காலமானார்.

அவரது உடல் இன்று மாலை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர் . இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் எஸ்.பி.பியின் உடல் செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது. கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது.


latest tamil news


தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.,25) நண்பகல் 1:04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), காலமானார். இந்த தகவல் அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார். ‛உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்தது' என எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி., உடல் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது. நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

தாமரைபாக்கம் பண்ணை வீட்டிற்கு செல்லும் எஸ்.பி.பி.., உடலுக்கு வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் மலர்தூவியும்,ரசிகர்கள் செல்போனில் படம் பிடித்தவாறும், இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தவாறு சென்றனர்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202010:04:59 IST Report Abuse
SAPERE AUDE திரு S P பாலசுப்பிரமணியன் மாபெரும் இசை கலைஞர். "சங்கராபரணம்" சினிமாவின் மூலம் பிரபலமானார். இவர் பாடியுள்ள சிவஸ்துதிகள் சிவாஷ்டகம், லிங்காஷ்டகம், விஸ்வநாதாஷ்டகம் மற்றும் பில்வாஷ்டகம் சிவ பக்தர்களுக்கு ஓர் வரப்பரசாதம். தவிர நிறைய பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.SPB அவர்களின் அகால மறைவு சங்கீத உலகிற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை துதிப்போம்.நம சிவாய.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
26-செப்-202010:03:23 IST Report Abuse
M.COM.N.K.K. ஒரு மாணவனாக இருந்த பொழுது நமது எஸ். பி . பி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் அந்த மாணவனுக்காக பல மாதங்கள் காத்திருந்து அடிமைப்பெண் படத்தில் வாய்ப்பளித்தார் அந்த அருமையான வாய்ப்பை எஸ்.பி.பி. நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு அவர் திரை உலகில் முன்னணி பாடகராக பின்னணி பாடினார்.அவருக்கு அரசு மரியாதை கொடுத்ததும் மக்கள்திலகம் ஆட்சியே எஸ்.பி.பி. அவர்களுக்கு முதல் மரியாதையையும் இறுதி மரியாதையையும் மக்கள்திலகமே கொடுத்தார் கண்ணீர்வடிக்கும் இந்த நேரத்தில் இதை நினைவுகூரவேண்டியது நமது கடமையாகும்.தமிழக முதல்வருக்கு மனமார்ந்த இதயம் கனிந்த நன்றிகள் பலகோடி
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
26-செப்-202009:46:22 IST Report Abuse
மூல பத்திரம் முதல்வருக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X