ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பு சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை| Dinamalar

ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பு சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (7)
Share
மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக லண்டனில் உள்ள ரூ.127 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை மையமாக வைத்து செயல்பட்ட யெஸ் பேங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.4,300 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு வெிளச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
YesBank, RanaKapoor, London, Flat, ராணாகபூர், சொத்து, முடக்கம், அமலாக்கத்துறை,

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக லண்டனில் உள்ள ரூ.127 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை மையமாக வைத்து செயல்பட்ட யெஸ் பேங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.4,300 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு வெிளச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு தொடர்பாக, ராணா கபூர் மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தனர். யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றது.


latest tamil news



சிபிஐ விசாரணையில், தீவான் நிதி நிறுவனத்தில் ரூ.3,700 கோடி அளவுக்கு யெஸ் வங்கி முதலீடு செய்ததும், அதேகாலகட்டத்தில் , ராணா கபூரின் 3 மகள்கள் ரோஷிணி, ராகீ மற்றும் டாண்டன் கபூரூக்கு சொந்தமான நிறுவனத்திற்கு ரூ.600 கோடி கடன் கொடுத்ததும் தெரியவந்தது. மும்பையில் உள்ள ஆர்கே டபிள்யூ நிறுவனத்திற்கு ரூ.750 கோடி கடன் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ராணா கபூர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

இந்நிலையில், ராணா கபூருக்கு சொந்தமாக லண்டனில் உள்ள 127 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. லண்டனில் 77 சவுத் ஆட்லி தெரு என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முடக்கப்பட்டது. இது பிரிட்டன் பண மதிப்பில் 13.5 மில்லியன் பவுண்ட் மதிப்புடையது. இதனை கடந்த 2017 ல் 93 கோடி( 9.9 மில்லியன் பவுண்ட் ) அளவுக்கு,டோயிட் கிரியேசன்ஸ் ஜெர்சி லிமிடெட் என்ற பெயரில் ராணா கபூர் வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X