பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்: ஹர்தீப்சிங் புரி

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
hardeep sing puri, domestic flights, 1 crore passengers, ஹர்தீப் சிங் புரி, உள்நாட்டு விமானங்கள், 1 கோடி பயணிகள்

புதுடில்லி: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் ரயில், பஸ் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அடுத்தடுத்த ஊரடங்கு கட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விமானப்போக்குவரத்து துவங்கியது. மே.,25ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.


latest tamil news



கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமானப் பயணம் செய்யத் துவங்கி உள்ளனர். மார்ச்., 25ல் நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து மே 25க்குப் பிறகு படிப்படியாக விரிவு படுத்தப்பட்டுள்ளது' இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
26-செப்-202010:15:10 IST Report Abuse
thulakol கோவைக்கு வரவேண்டிய கோலாலம்பூர், துபாய் இந்தோனேஷியா ஒபெரடிங் லைசென்ஸ் என்ன ஆச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X