பொது செய்தி

இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் வருகைப்பதிவு 68.65 சதவீதம்: ஓம் பிர்லா

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
loksabha, attendance, 68.65 percent, om birla, monsoon session, லோக்சபா, வருகைப் பதிவு, 68.65 சதவீதம், ஓம்பிர்லா, மழைக்கால கூட்டத் தொடர்

புதுடில்லி: மழைக்கால கூட்டத் தொடரில் லோக் சபாவில் வருகைப் பதிவு 68.65 ஆக இருந்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

செப்., 14 முதல் செப்., 23 வரை 10 தடவை நடந்த கூட்டத்தில் 8,700 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா குறித்த விவாதம் 5 மணி நேரம் 8 நிமிடங்கள் நடந்தது அதில் 74 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். செப்.,13 மற்றும் 14ம் தேதிகளில் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கொரோனா குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி உறுப்பினர்களிடம் பேசினார்.

வரலாற்றில் முதல் முறையாக இரு அவை உறுப்பினர்களும் சமூக இடைவெளியுடன் ஒன்றாக சமூக இடைவெளியுடன் அமர்ந்தனர். முதல் நாள் கூட்டத்தில் 369 பேரும், அதிக பட்சமாக செப்., 22 கூட்டத்தில் 383 பேரும் கலந்து கொண்டனர். சராசரியாக 370 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்களின் சராசரி வருகைப் பதிவு 68.65 ஆக இருந்தது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 16 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 35 மணி 24 நிமிடங்களில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பூஜ்ய நேரத்தில் 88 எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். 370 எம்.பி.,க்கள் பொது பிரச்னைகள் குறித்து வாதாடினர். மொத்தம் 10 மணி 23 நிமிடங்கள் செலவிடப்பட்டது.


latest tamil news



அமைச்சர்கள் 40 கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் எல்லை பிரச்னை குறித்து பேசினார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் பேசினர்.

புதிய பார்லி கட்டடம் குறித்து பேசிய ஓம்பிர்லா, ரூ 891.9 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். 21 மாதங்களில் அது கட்டி முடிக்கப்படும் எனவும் 75வது சுதந்திர தினவிழாவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202022:17:07 IST Report Abuse
ஆரூர் ரங் சமூக விலகல் ரொம்ப😥 கஷ்டமய்யா. கண்ணடிச்சு😉😉 கட்டிப்பிடிக்க🙃 முடியாம ஒருத்தர் அம்மாவோடு எஸ்கேப் ஆகி ஆப்சென்ட். இனிமேலும் சமூக விலகலைக் கட்டாயப் படுத்தினா இதுதான் நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X