பொது செய்தி

இந்தியா

ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவின் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரில் இன்று மாநகர போக்குவரத்து சேவை துவங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் முடக்கப்பட்டன. ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, விதிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. நகரின் முக்கிய இடங்களில் தேவையான சுகாதார நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து, தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் ( TSRTC ) இன்று தனது சேவையை தொடங்குகிறது.

ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில், போக்குவரத்து சேவைகளில் 25 சதவீதத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு, RTC அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதால், பேருந்து சேவை இயக்கப்பட்டது. பல டிப்போக்கள் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தலா 20 க்கும் மேற்பட்ட பேருந்துகளுடன் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சேவையின் போதும் / அவ்வபோது பேருந்துகள் கிருமி நாசினியால் சுத்திகரிக்கப்படும். வேண்டுகோளின் பேரில் பயணிகளுக்கு சானிடிசர்களும் வழங்கப்பட்டன.


latest tamil news



இது தொடர்பாக ஐதராபாத் மாநில போக்குவரத்துதுறை அமைச்சர் பி. அஜய் கூறுகையில், தெலுங்கானாவில் கொரோனா தொற்றின் பரவல் துவங்கியதை அடுத்து, ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்களில், 25 சதவீத பேருந்து சேவைகளை இன்று துவக்கி உள்ளோம். மேலும் தற்போதுள்ள சூழ்நிலைகளை பொறுத்து சேவைகள் அதிகரிக்கப்படும். ஐதராபாத் நகரின் மொத்த பேருந்துகளில் இன்று 650 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. நகரின் பேருந்து சேவைகளால், பெரும்பாலானவர்கள் பயனடைவர். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X