மருத்துவ கவுன்சிலுக்கு குட்பை: ஒழுங்குப்படுத்த தேசிய கமிஷன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவ கவுன்சிலுக்கு 'குட்பை: ஒழுங்குப்படுத்த தேசிய கமிஷன்

Updated : செப் 27, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறைகளை ஒழுங்குமுறைபடுத்தி வந்த, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, நாட்டின் உச்சபட்ச ஒழுங்குமுறை அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ கமிஷன், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.நாட்டின், மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பாக, எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்தது. இதில், ஊழல்
மருத்துவ கவுன்சிலுக்கு 'குட்பை: ஒழுங்குப்படுத்த தேசிய கமிஷன்

புதுடில்லி: மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறைகளை ஒழுங்குமுறைபடுத்தி வந்த, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, நாட்டின் உச்சபட்ச ஒழுங்குமுறை அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ கமிஷன், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
நாட்டின், மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பாக, எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்தது.

இதில், ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2018ம் ஆண்டில், 64 ஆண்டுகள் பழமையான, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்தது. அதற்கு பதிலாக தேசிய மருத்துவ கமிஷனை உருவாக்க திட்டமிட்டது.இதற்கு, நாடு முழுதும் உள்ள மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும் தேசிய மருத்துவ கமிஷனுக்கான மசோதா, பார்லிமென்டில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.


ஒப்புதல்அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 8ல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தேசிய மருத்துவ கமிஷனின் உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள், கடந்த ஜனவரியில் நடந்தன. அதற்காக, மத்திய அரசுக்கு, 72 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.தேசிய மருத்துவ கமிஷனின், முதல் தலைவராக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின், இ.என்.டி., எனப்படும், காது, மூக்கு, தொண்டைக்கான அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், டாக்டர் சுரேஷ் சந்திர சர்மா நியமிக்கப்பட்டார்.
இவர், மூன்று ஆண்டுகள் வரை, இந்த பதவியில் நீடிப்பார் என, தெரிவிக்கப்பட்டது. கலைக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின், கவர்னர்கள் வாரிய பொது செயலராக பதவி வகித்து வந்த ராகேஷ் குமார் வட்ஸ், தேசிய மருத்துவ கமிஷனின் செயலராக நியமிக்கப்பட்டார்.


நெறிமுறைஇளநிலை மருத்துவ கல்வி வாரியம், முதுநிலை மருத்துவ கல்வி வாரியம், மருத்துவ தர நிர்ணயம் மற்றும் மதிப்பீட்டு வாரியம் மற்றும் நெறிமுறைகள் மற்றும் மருத்துவ
பதிவுத் துறை வாரியம் என, நான்கு தன்னாட்சி வாரியங்கள், தேசிய மருத்துவ கமிஷனின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும், நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக, மத்திய சுகாதாரத் துறை இணை செயலர், நிபுன் விநாயக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மருத்துவ கமிஷனில், தலைவரை தவிர, 10 செயல் உறுப்பினர்களும், 22 பகுதி நேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த, 10 செயல் உறுப்பினர்களில், நான்கு தன்னாட்சி வாரியங்களின் தலைவர்களும் அடங்குவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X