வேளாண் மசோதாக்களால் சிறு விவசாயிகளுக்கு பலன்| Dinamalar

'வேளாண் மசோதாக்களால் சிறு விவசாயிகளுக்கு பலன்'

Updated : செப் 27, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: ''பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய விவசாய மசோதாக்களால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெரிதும் பயனடைவர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான, ஜனசங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் பிறந்த நாள், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பா.ஜ.,வி னர் இடையே, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக
'வேளாண் மசோதாக்களால் சிறு விவசாயிகளுக்கு பலன்'

புதுடில்லி: ''பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய விவசாய மசோதாக்களால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெரிதும் பயனடைவர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான, ஜனசங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் பிறந்த நாள், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பா.ஜ.,வி னர் இடையே, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று பேசினார். அவர் கூறியதாவது:
மத்திய அரசு, பார்லி.,யில் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களும், விவசாயிகளின் நலன் சார்ந்தவை. வேளாண் துறையில் சீர்திருத்தங்களைச் செய்யும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை. இந்த சீர்திருத்தங்கள் மூலம், நாட்டில் உள்ள, 85 சதவீத சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயன் பெறுவர்.

தங்கள் விளைபொருட்களை, பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக நல்ல விலைக்கு, விவசாயிகள் விற்பனை செய்ய, இந்த மசோதாக்கள் வழிவகுத்து உள்ளன. இந்த மசோதாக்களின் பலன்கள், நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு, பா.ஜ.,வினர் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.

ஏனெனில், இந்த மசோதாக்கள் பற்றி, மக்களிடம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. சுதந்திரம் பெற்றதில்இருந்து, வெற்று கோஷங்களை மட்டுமே, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக, பல ஆண்டுகளாகக் சில கட்சிகள் கூறி வருகின்றன.

விவசாயிகளின் பெயரைக் கூறியே மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் அரசுகளை அமைத்தனர். விவசாயிகளிடம் எப்போதும் பொய்களைக் கூறுபவர்கள், அவர்களுக்கு பின்னால் மறைந்து, எந்த விளைவுகளையும் சந்திக்காமல், விவசாயிகளை துாண்டி விடுகின்றனர். நாடு தான் முதலில் என்பது தான்நம் மந்திரம். இவ்வாறு, பிரதமர் பேசினார்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X