எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

Updated : செப் 26, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், 'டிஸ்கோ' கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர். இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், 'டிஸ்கோ' கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.latest tamil newsஇவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.'ஹரிகதை' சொல்லும் கலைஞரான தந்தை சாம்பமூர்த்தியிடம் இருந்து இசை ஆர்வம், எஸ்.பி.பி.,க்கு பிறந்தது. இளம் வயதில் ஹார்மோனியம், புல்லாங்குழல் கற்றார். பின் ஆந்திராவின், ஜே.என்.டி.யு., காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் பி.இ., சேர்ந்தார்.


latest tamil newsஉடல்நிலை பாதிப்பால், படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து, ஏ.எம்.ஐ.இ., படித்தார். 1964ல் சென்னையில் உள்ள ஆந்திர கலாசார மையம் நடத்திய பாடல் போட்டியில் முதல் பரிசு பெற, மீண்டும் இசை பக்கம் பயணிக்க துவங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். 'தமிழ் தெரியுமா' என்று எம்.எஸ்.வி., கேட்க, 'பேசத் தெரியும், படிக்க தெரியாது' எனக் கூறியிருக்கிறார். 'உனக்கு பாட வாய்ப்பு தருகிறேன். தமிழை நன்றாக கற்றுக் கொள்' என்ற எம்.எஸ்.வி., அறிவுரைப்படி தமிழ் கற்றார். எம்.எஸ்.வி., கூறிய படியே இவருக்கு, ஹோட்டல் ரம்பா படத்தில் வாய்ப்பு தந்தார்.


latest tamil news


Advertisement


இப்படம் வெளியாகவில்லை. பின் எம்.எஸ்.வி., இசையில் சாந்தி நிலையம் படத்தில், 1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார்.
இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக வெளிவர, ரசிகர்களின் இதயங்களில் அழுத்தமாக இடம் பிடித்தார்.


latest tamil news

'நெல்லுார்' நாயகன்இயற்பெயர் : ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்
சினிமா பெயர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
புனைப்பெயர் : பாலு, எஸ்.பி.பி.,பிறப்பு : 4.6.1946
பிறந்த இடம் : நெல்லுார், ஆந்திரா
பெற்றோர் : தந்தை சாம்பமூர்த்தி, தாய் சகுந்தலாம்மா
சகோதரி : எஸ்.பி.சைலஜா - பாடகி
மனைவி : சாவித்ரி
குழந்தைகள் : சரண் - மகன், பல்லவி - மகள்
சினிமா அனுபவம் : 1966 -- 2020latest tamil newsஎம்.ஜி.ஆர்., வாய்ப்புஅடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய, 'ஆயிரம் நிலவே வா...' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்' என்றார்.
சில மாதம் கழித்து, எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும், எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார். அப்போது, எம்.ஜி.ஆர்., 'என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என' பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார், எம்.ஜி.ஆர்.,


latest tamil news

கடவுள் மொழிகடவுள் பேசும் மொழி என்று ஏதாவது இருந்தால், அது தான் இசை. மிகவும் புனிதமானது. அனைத்து மொழிகளிலும் இசையை பயன்படுத்தலாம். உலகளாவிய தன்மை கொண்டது இசை.-எஸ்.பி.பி.,


குருவே சரணம்தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணி மூலம் அறிமுக பாடல் பாடினார். படம்: ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா.(டிச.15, 1966). தன் 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு, 'கோதண்டபாணி' என பெயர் சூட்டி, குருவுக்கு நன்றி செலுத்தினார், எஸ்.பி.பி.,வெள்ளித்திரையில்மனதில் உறுதிவேண்டும், கேளடி கண்மணி, சிகரம், குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், உல்லாசம், ரட்சகன், பிரியமானவளே, நாணயம் என பல தமிழ் படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடமேற்றும் நடித்தார்.


latest tamil newsசிரிப்பு... சிறப்புசில பாடல்களுக்கிடையே எஸ்.பி.பி., உதிர்க்கும் சிரிப்பு, அதன் சுவையை அதிகரிக்கும். பல குரலில் பாடுவது இவருக்கே உரிய தனித்தன்மை

பன்முக திறன்நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர்.


40,000தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.


latest tamil news

விருதுகள்
தேசிய விருது -6* 1979ல் சங்கராபரணம் - தெலுங்கு - 'ஓம்கார நாதானு...'
* 1981 ஏக் துஜே கே லியே - ஹிந்தி - 'தேரே மேரே பீச் மே...'
* 1983 சாஹர சங்கமம் - தெலுங்கு - 'தகிட ததிமி...'
* 1988 ருத்ர வீணா - தெலுங்கு - 'செப்பாலனி உண்டி...'
* 1995 சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷ்ரா கவய் - கன்னடம் - 'உமண்டு குமண்டு...'
* 1996 மின்சார கனவு - தமிழ் - 'தங்கத் தாமரை மகளே...'


பத்ம விருதுகள்* 2001 - 'பத்மஸ்ரீ'
* 2011 - 'பத்ம பூஷண்'கலைமாமணி
* 1981- தமிழக அரசின், 'கலைமாமணி' விருது.


latest tamil newsபிலிம்பேர் விருது* 1989 - மைனே பியார் கியா (ஹிந்தி) படத்தில் 'தில் தீவானா...' பாடலுக்காக, 'பிலிம்பேர்' விருது
* 2007 - மொழி -- தமிழ் படத்திற்கு, 'பிலிம்பேர்' விருது
* 1969 - அடிமைப் பெண், 'சாந்தி நிலையம்...' 1990ல் கேளடி கண்மணி படத்தில் பாடியதற்காக தமிழக அரசின் சினிமா விருது.

* தெலுங்கில் பாடகர், சிறந்த இசையமைப்பாளருக்கான, 'நந்தி விருது'

கர்நாடக அரசு, சினிமா விருது,


கேரள அரசின், ஹரிவராசணம் விருது* பல பல்கலை, 'டாக்டர்' பட்டம்.

ஜேசுதாஸ்


மீது

பாசம்

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் பாடல்களையே கச்சேரிகளில் பாடினேன். அப்போது பயபக்தியுடன் பார்த்தேன். இருவரும் கச்சேரிகளில், ஒரே மைக்கில் பாட துவங்கியபோது நட்பு அதிகமானது. அது அழகான பந்தம். சகோதரரைவிட அதிகம் நேசிக்கிறேன். அவரது குரல், கடவுள் கொடுத்த வரம்.
-எஸ்.பி.பி.,


என் தம்பி கொடுத்த உணவுஒருமுறை பாரிசில் கச்சேரி முடித்து ஓட்டல் திரும்பினேன். அறையில் சாப்பாடு எதுவும் இல்லை. அப்போது கதவை டக்... டக்... என, தட்டும் ஓசை கேட்டது. 'ரூம் சர்வீஸ்' என்ற குரலுடன் என் தம்பி, சோறும் சட்னியும் கொண்டு வந்தான். அவன் வெளிநாட்டு பயணங்களின் போது ரைஸ் குக்கர், குழம்பு மசாலா, நெய் கொண்டு செல்வான். என்னா ருசி...என் தம்பி பாலு கொடுத்த உணவை மறக்க முடியுமா... எங்களது நட்பு ஜென்மம் ஜென்மமாக தொடரக் கூடியது.
-ஜேசுதாஸ்


துளிகள்* சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார்.

* தேவராஜன் இசையமைப்பில் கடல்பாலம் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார்.

* கமல், ரஜினி, விஜயகாந்த் என, அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர்.

* ஜெமினிகணேசன், நாகேஷ், கமல், மோகன், பாக்யராஜ், அர்ஜுன், கிரிஷ் கர்னாட், அனில் கபூர், சல்மான் கான் என, முன்னணி நட்சத்திரங்களுக்கு, 'டப்பிங் ஆர்டிஸ்டாக' பணிபுரிந்தார்.

* ஏக் துஜே கே லியே படத்தில், 'தேரே மேரே பீச் மே...' என்ற பாடலை பாடி, ஹிந்தி திரையுலகில் கணக்கை துவக்கினார்.

* கேளடி கண்மணியில் 'மண்ணில் இந்தக் காதல்...' அமர்க்களம் படத்தில், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.


ஜோரான 'ரோஜா'ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்.பி.பி., கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது. முதல் படமான, ரோஜாவில் மூன்று பாடல்களை பாடினார், எஸ்.பி.பி.,


ஒரே நாளில் '21'கன்னடத்தில் ஒரே நாளில் (1981 பிப்., 8ல், காலை, 9:00 - இரவு 9:00 மணி) 21 பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தமிழில் - 19, ஹிந்தியில் -16 பாடல்களை
ஒரே நாளில் பாடினார்.


நிலவு 'காதலன்'நிலவை மையமாக வைத்து, எஸ்.பி.பி., பாடிய, 250க்கும் மேற்பட்ட பாடல்கள், 'சூப்பர் ஹிட்' ஆனது. 'ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா...' போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.


இசையமைப்பாளர்துடிக்கும் கரங்கள், மயூரி, சிகரம், தையல்காரன், ஊர்பஞ்சாயத்து, உன்னைச் சரணடைந்தேன் உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தார்.


இளையராஜா கூட்டணிகமல், ரஜினிக்கு இவரது குரல் பொருத்தமானதாக இருந்தது. 1976ல் இளையராஜாவின் வருகைக்குப் பின் இவருடைய திரையிசைப் பயணம் ரெக்கை கட்டி பறந்தது. ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களை பாடினார். இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல், பாலுாட்டி வளர்த்த கிளி படத்தில், ஜானகியோடு இணைந்து 'நான் பேச வந்தேன்...'

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
27-செப்-202009:08:57 IST Report Abuse
ngopalsami மாபெரும் கலைஞனுக்கு இறப்பு என்பது எப்போதும் இல்லை. அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Rate this:
Cancel
26-செப்-202019:54:15 IST Report Abuse
 மோகன் அருமையான பாடகர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X