மீண்டும் வீழ்ந்தது சென்னை| Dinamalar

மீண்டும் வீழ்ந்தது சென்னை

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (7)
Share
துபாய்: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்ரேயாசின் டில்லியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.சென்னை அணியில் லுங்கிடி நீக்கப்பட்டு ஹேசல்வுட்

துபாய்: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.



latest tamil news



ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்ரேயாசின் டில்லியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.சென்னை அணியில் லுங்கிடி நீக்கப்பட்டு ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் தோள்பட்டை காயமடைந்த அஷ்வினுக்குப் பதில் அமித் மிஸ்ரா, மோகித் சர்மாவுக்குப் பதில் அவேஷ் கான் இடம் பெற்றனர்.
டில்லி அணிக்கு தவான் 35 ரன் எடுக்க, பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். ஸ்ரேயாஸ் 26 ரன்களுக்கு அவுட்டாகினார். டில்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் (37), ஸ்டாய்னிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news



சென்னை அணியின் வாட்சன் (14), முரளி விஜய் (10), ருதுராஜ் (5) ஏமாற்றினர். கேதர் ஜாதவ் 26, டுபிளசி 43 ரன்கள் எடுத்து திரும்பினர். தோனி 15, ஜடேஜா 12 ரன் எடுத்தனர். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X