பொது செய்தி

இந்தியா

ரூ.1.77 லட்சம் கோடி கடனுக்கான அனுமதி

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ரூ.1.77 லட்சம் கோடி கடனுக்கான அனுமதி

புதுடில்லி: மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த, 21ம் தேதி வரை, மொத்தம், 1.77 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.இது குறித்து, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த, 21ம் தேதி வரை, மொத்தம், 1.77 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான அனுமதி, 44.2 வணிகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


latest tamil news



இதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.இந்த கடன்கள், 12 பொதுத்துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த, 21ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் மூலம், 79 ஆயிரத்து, 347 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டு, 65 ஆயிரத்து, 51 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
26-செப்-202017:32:12 IST Report Abuse
mohan இலவசங்களை முறை படுத்தினால் , தொழில் நன்றாக வளரும்....
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
26-செப்-202006:45:36 IST Report Abuse
siriyaar இந்தியர்களின் கடன் தற்போது மத்திய மாநில கடனை சேர்த்து 250 லட்சம் கோடி, கட்டும் வட்டி வசூல் செய்யும் வரியில் பாதி, ஆனாலும் கடன் கடன் என்று வாரி வழங்குவது தவிரத்து கம்பெனிகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை கற்று தர வேண்டும். கடன் கொடுப்பதும் ரோடு போடுவதும் மட்டுமே தொழிலை வளர்ச்சி அடைய செய்யாது. ஒவ்வொரு தொழிலும் இருக்கும் தொழில் நுட்ப பின்னடைவை ஆராய்ந்து அதற்கான முதலீடுகளை செய்ய வேண்டியது அரசாங்கம். அது நடக்காத வரை சீனாவிடம் வியாபாரத்தில் தோற்று கொண்டே இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X