அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டம்; வேளாண் சட்ட விவகாரத்தில் அமைச்சர் காட்டம்

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Farm Bill 2020, farm trade Bill, farmers

சென்னை : ''தேர்தல் வருவதால், வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன,'' என, வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, வேளாண் திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை. அவற்றால், எந்த பாதிப்பும் கிடையாது. குறிப்பாக, தமிழக விவசாயிகளுக்கு, எந்த பாதிப்பும் இருக்காது.முதல்வர் ஒரு விவசாயி.விவசாயிகள் லாபம் பெற, உயர்வு பெற வழிவகுக்கும் சட்டங்களையே ஆதரிப்பார். இந்த சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வு மேம்பட உதவும் என்பதால், முதல்வர் ஆதரிக்கிறார்.

சட்டத்தின் விபரங்களை, விவசாயிகளுக்கு விளக்கும்படி, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண் துறையை பொறுத்தவரை, மத்திய அரசு எதிலும் தலையிடவில்லை.வேளாண் துறைக்கு கேட்ட நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது.

நாட்டிலேயே வேளாண் துறையில், தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.தொடர்ந்து, ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசின் விருதுகளை பெற்று வருகிறோம்.தேர்தல் வருவதால், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. கொரோனாவை ஒழிக்க, இரவு பகல் பாராமல் பாடுபடும் முதல்வரையே, குறை கூறுகின்றனர்.இவ்வாறு, அவர்கூறினார்.


'தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை'

வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேட்டி: மூன்று வேளாண் சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாய சட்டம், தமிழகத்தில் அமலில் உள்ளது.கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவில் முதன் முறையாக, தமிழகத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது; 2019 அக்டோபரில், அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.


latest tamil newsஇந்த சட்டத்தை, மத்திய அரசு, நாடு முழுதும் கொண்டு வருகிறது. நம் விதிமுறைகள் தான் பெரும்பாலும், இந்த சட்டத்தில் உள்ளன. இந்த சட்டம், நம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, விவசாயி தக்காளி உற்பத்தி செய்கிறார். தனியார் கம்பெனி, இரு மாதங்கள் கழித்து, தக்காளியை கொள்முதல் செய்வதாகவும், கிலோவுக்கு, 15 ரூபாய் தருவதாகவும் வாய்மொழியாக கூறுவர். அதை நம்பி, தக்காளி பயிரிட்டிருப்பார்.

இரு மாதங்களுக்கு பின், தக்காளி விலை கிலோ, 10 ரூபாய் என்றால், ஒப்பந்தம் போட்ட நிறுவனம், 10 ரூபாய் தான் என கூறும். இதனால், விவசாயிகள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. தமிழக சட்டத்தின் படி, தரம், எண்ணிக்கை, விலை, ஆகியவற்றை முன்னதாக பேசி, மாநில அரசு அலுவலர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்; அப்போது, ஏமாற்ற முடியாது.

இரு மாதம் கழித்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட, அன்று மார்க்கெட் விலை கூடுதலாக இருந்தால், அதை தர வேண்டும் என, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டால், அதை வழங்க வேண்டும். ஒப்பந்தத்தை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்க, 'சீல்' வைக்க, சப் - -கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது. விவசாயிகள் ஒப்பந்தம் போட வேண்டும் என்று, அவசியம் இல்லை. ஒப்பந்தம் போடாமலும், விருப்பப்படி விற்பனை செய்யலாம்.

இந்த சட்டத்தில், விவசாயிகள் நலன் காக்க, பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.விவசாயிகள், ஒப்பந்தம் போடும் போது, குறைந்தபட்ச ஆதார விலையை விட, கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது, விதிகளில் கொண்டு வரப்படும். கரும்புக்கான விலையை, தனியார் கொடுக்காத போது, அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. விவசாயிகளுக்கு பணத்தை பெற்று தருவது, அரசின் கடமை. பணம் தராத நிறுவனங்களை, ஜப்தி செய்ய அதிகாரம் உள்ளது.

ஒப்பந்தப்படி நிறுவனங்கள், பொருட்களை வாங்காவிட்டால், 150 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம். இதில், நிறைய சர்ச்சை உள்ளது. நிறைய வட மாநிலங்களில், விவசாயிகள் விளைபொருட்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே விற்க முடியும். பல்வேறு விதிகள் காரணமாக, வெளியில் விற்பது கடினமாக உள்ளது.

தமிழகத்தில், ஏற்கனவே விவசாயிகளுக்காக, மூன்று வகையான விற்பனை முறை உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடம்; வெளி மார்க்கெட், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என, மூன்று முறைகளில், விவசாயிகள் விற்பனை செய்ய முடியும்.கடந்த ஆண்டு, 2.41 லட்சம் டன் பச்சைப் பயறு, உளுந்து போன்றவற்றை, விவசாயிகள், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு, விற்பனை செய்தனர். கொப்பரை தேங்காய், குறைந்தபட்ச ஆதார விலையை விட, வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அரசை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தால் மகிழ்ச்சி.கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கு, 128 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது தமிழகத்தில், ஏற்கனவே விவசாயிகள் விரும்பும் இடத்தில், விற்பனை செய்ய அனுமதி உள்ளது. அதைத் தான் மத்திய அரசின் சட்டம் வலியுறுத்துகிறது.

தமிழக அரசு, சந்தை கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது. அதேபோல், குறைந்த பட்ச ஆதார விலை இருந்தால் தான், வெளி மார்க்கெட்டில், வியாபாரிகள் கூடுதல்விலைக்கு, விளை பொருட்களை வாங்குவர். இதற்கு அரசு வழிவகுத்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202015:20:07 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) விவசாய சட்டங்களை எளிய விவசாயிகளும் புரியும் படி விளக்க வேண்டும் இல்லை என்றால் தவறான சட்டங்கள் என்று விதைத்து விடுவார்கள் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel
26-செப்-202009:17:26 IST Report Abuse
ஆரூர் ரங் மொத்த வணிகர்களே கந்து வட்டிக்காரர்களாகவும் செயல்பட்டு விவசாயிகளின் லாபத்தை முன்கூட்டியே உறிஞ்சுகிறார்கள். இதை அரசு சட்டம் கெடுத்துவிட்டது திராவிஷர்களுக்கு வெறியேற்றியுள்ளது புரிகிறது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-செப்-202008:49:21 IST Report Abuse
Sampath Kumar அண்ணா தீமுகா அம்மா திமுக அப்பா தீமுக்க முக்க திமுக முக்கின தீமுக்க எல்லாம் பாக்கிகளை வாங்க அண்னன் டேனியல் அறைகூவல் விட்டாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X