சென்னை: பள்ளிகளை திறப்பதாக அறிவித்துவிட்டு குழப்பங்கள் ஏற்படுத்துவது ஏன் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது :
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அக். 1ம் தேதி திறக்கப்படும் என உத்தரவு வெளியிட்ட பிறகு, 50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் குறித்து சுகாதார அமைச்சர் முடிவு செய்வார். பாடத்திட்டங்கள் பற்றி முதல்வர முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
'வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்'. 'பெற்றோர் சம்மதக்கடிதம் அவசியம்' என்றும் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் தலையில் அதிமுக அரசு போடுகிறது. பள்ளிகளை திறக்கிறோம் என அறிவித்துவிட்டு எதற்கு இவ்வளவு குழப்பங்கள்.

பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி அரசாணை வெளியிட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. இப்படி அவசர கதியில் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்வதன் புதிர் என்ன? மாணவ- மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒரு புறம் விளையாடுகிறது; அ.தி.மு.க., அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறது.
எழுத்துப்பூர்வமாக 'பெற்றோரிடம் அனுமதி பெற்றுத்தானே வந்தீர்கள்' அலட்சியமாக இருந்துவிடாமல் மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்கு சென்று பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகள் திறப்பை அறிவித்துவிட்டு ஆசிரியர்கள் குறித்து @Vijayabaskarofl, பாடத்திட்டம் குறித்து @CMOTamilNadu முடிவு செய்வார்கள் என்கிறார் @KASengottaiyan.#GO வெளியிடும் முன்பே கலந்தாலோசிக்கவில்லையா?
பாதுகாப்பை பெற்றோர் தலையில் போட்டுத் தப்பிக்காமல் அரசே உறுதி செய்ய வேண்டும்! pic.twitter.com/Z9Ci2umLQz
— M.K.Stalin (@mkstalin) September 26, 2020
இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.