இலங்கைக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது: மோடி பேச்சு

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாட்டின்போது, இலங்கை அரசுடனான உறவுக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன்
PM_Modi, Rajapaksa, Priority, India, SriLanka, இந்தியா, இலங்கை, முன்னுரிமை, ராஜபக்சே, மோடி

புதுடில்லி: காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாட்டின்போது, இலங்கை அரசுடனான உறவுக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

உச்சி மாநாட்டில் மோடி பேசியதாவது: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் (இலங்கை பிரதமர் ராஜபக்சே) கட்சி வெற்றி பெற்று, தாங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். எனது அழைப்பை ஏற்று இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி.


latest tamil news


இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, ‛கொரோனா தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது,' எனப் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
26-செப்-202017:26:57 IST Report Abuse
ponssasi நீங்க என்னதான் கொட்டி கொடுத்தாலும் நம்மை மிரட்டி ஆதாயம் அடைய அவன் சீனாவிடம் தான் விலைபோவான். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு ஒரு பழமொழி உண்டு. அதற்கு நல்ல உதாரணம் இலங்கை. இதில் பாகிஸ்தானை சேர்க்கக்கூடாது ஏனெனில் அவன் நம்மிடம் எதிரியாகவே இருக்கிறான். அதனால் அவர்களிடம் பயப்பட தேவையில்லை.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-செப்-202003:20:45 IST Report Abuse
Sanny முற்றிலும் உண்மை, Possasi ஜி, எதிரி எதிரி ஆகா இருப்பவனை நம்பலாம், ஆனால் கூடவே நண்பனாக இருந்து தக்க சமயத்தில் கத்தியை கழுத்தில் வைப்பவனை நம்பக்கூடாது....
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
26-செப்-202017:04:33 IST Report Abuse
Ramona அதுதான் இப்போது சீனா கானுக்கு விலை போயிடுச்சே, சீனாக்கரன் ஒரு பகாசூரன் மொத்தமாக அதனை ஏப்பம் விடாம இருக்கமாட்டான்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
26-செப்-202016:35:55 IST Report Abuse
Anand தமிழ்நாட்டிலிருந்து சென்று பல்லிளித்து வாங்கிய பரிசு பெட்டியில் அப்படி எதை வைத்து கொடுத்தார் என கூறச்சொல்லுங்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X