பீஜிங்கில் துவங்கி உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி| Dinamalar

பீஜிங்கில் துவங்கி உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (செப்.,26) முதல் சர்வேதேச ஆட்டோமொபைல் கண்காட்சி துவங்கியது.கொரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த கண்காட்சி, ஒத்திவைக்கப்பட்டு இன்று செப்.,26 துவங்கி அக்., 5 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி பீஜிங்கில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் சுமார் 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் நடக்கிறது.இக்கண்காட்சியில் சர்வேதேச கார் நிறுவனங்களின்
china, beijing, international automobile exhibition, சீனா, சர்வதேச கார் கண்காட்சி, பீஜிங்

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (செப்.,26) முதல் சர்வேதேச ஆட்டோமொபைல் கண்காட்சி துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த கண்காட்சி, ஒத்திவைக்கப்பட்டு இன்று செப்.,26 துவங்கி அக்., 5 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி பீஜிங்கில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் சுமார் 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் நடக்கிறது.

இக்கண்காட்சியில் சர்வேதேச கார் நிறுவனங்களின் கார்கள் இடம் பெறுகின்றன. தற்போது பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன . ஆடி, ஜி.எம்., நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் இடம் பெறுகின்றன. எலக்ட்ரிக் கார்கள் தவிர இணைப்பு வாகனங்கள், ஆடம்பர வாகனங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.


latest tamil news



82 புதிய வாகனங்கள் உட்பட 785 வாகனங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலகுரக தொழில்நுட்பம் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்கள் உள்ளிட்டவை இதில் சிறப்பு கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X