பொது செய்தி

இந்தியா

நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் கொரோனா உயர்மட்ட சோதனை உபகரணங்கள்

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவின் நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (NIMS) கொரோனா சோதனைக்கான உயர்மட்ட சிறந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தெலுங்கானாவில் கொரோனா தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்

ஐதராபாத் : தெலுங்கானாவின் நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (NIMS) கொரோனா சோதனைக்கான உயர்மட்ட சிறந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகத்தில் கொரோனா சிகிச்சையை அரசு தொடங்கியுள்ளது. ஒரு நாளில் 3,000 கொரோனா சோதனைகளை நடத்தக்கூடிய (Cobas 8800 )கோபாஸ் 8800 RT-PCR கண்டறியும் சோதனை கருவிகளை செயல்படுத்தும் தென்னிந்தியாவின் முதல் மருத்துவமனையாக நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (NIMS) வெள்ளிக்கிழமை அமைந்தது.


latest tamil news



கோபாஸ் 800 உயர்தர ஆய்வகத்தை மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர், திறந்து வைத்தார். இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், NIMS பகுதியில் ஆய்வகம் அமைக்க மாநில அரசு ரூ. 6 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது. இது கொரோனா சோதனைக்கான முடிவுகளை விரைவாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 96 மாதிரிகள் (எட்டு மணிநேரங்களில்) 960 முடிவுகள் வரை மொத்தம் சோதிக்கப்படும். கொரோனா நோயறிதலைத் தவிர, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தேவையான சிக்கலான நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வதில் ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கும். கொரோனா அல்லாத சுகாதார வசதிகள் மற்றும் மாற்று வசதிகள் இன்னும் 15 நாட்களில் நிம்ஸில் புதுப்பிக்கப்படும்.

கொரோனா சிகிச்சை தொடர்பான பல்வேறு செயல்முறைகள, சாத்தியமான வசதிகள் கொரோனா நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தெளிவான வழிமுறைகளை முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கியுள்ளார். நாங்கள் விரைவில் நிம்ஸிற்கான வெளிநோயாளர் தொகுதியை நிர்மாணிப்போம், மேலும் அரசு மருத்துவமனைகளில் நான்காம் வகுப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டத்தையும் கொண்டு வருவோம். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202021:58:35 IST Report Abuse
Ramesh Sargam அதே ஹைதராபாத்தில் 'K' என்கிற பெயரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொரோனா இல்லாதவர்களையும் 'பாசிட்டிவ்' என்று கூறி மக்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X