இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விழியெங்கும் கண்ணீர் நிரப்பியபடி வழியெங்கும் திரண்டு நின்ற மக்களை பார்த்த போதுதான் தெரிந்தது அவர்கள் எந்த அளவிற்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பியை நேசித்திருக்கின்றனர் என்பது.அவரைப்பற்றி தேக்கி வைத்திருந்த செய்திகள் மலை போல வந்து குவிகின்றதுஅத்தனை செய்திகளும் அவர் ஒரு சிறந்த பன்மொழிப்பாடகர் என்பதற்க்காக மட்டும் கொண்டாடவில்லை. இப்படி ஒரு எளிமயைானவரை




latest tamil news



விழியெங்கும் கண்ணீர் நிரப்பியபடி வழியெங்கும் திரண்டு நின்ற மக்களை பார்த்த போதுதான் தெரிந்தது அவர்கள் எந்த அளவிற்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பியை நேசித்திருக்கின்றனர் என்பது.

அவரைப்பற்றி தேக்கி வைத்திருந்த செய்திகள் மலை போல வந்து குவிகின்றது

அத்தனை செய்திகளும் அவர் ஒரு சிறந்த பன்மொழிப்பாடகர் என்பதற்க்காக மட்டும் கொண்டாடவில்லை.


latest tamil news



இப்படி ஒரு எளிமயைானவரை எல்லோருக்கும் நல்லவரை, பண்பாளரை,பாசமானவரை,தொழிலை தெய்வமாக நேசித்தவரை இனி எங்கே பார்க்கப் போகிறோம் என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க போகிறார் ஏழு கிலோமீட்டர் துார மலைப்பாதையில் நடக்க முடியாதவர்கள் டோலியில் செல்வர்.

‛டோலி' என்பது நடக்கமுடியாத பக்தர்களை சாய்வு நாற்காலியில் உட்காரவைத்து தலைச்சுமையாக நான்கு பேர் கட்டண அடிப்படையில் துாக்கிச் சென்று தரிசனம் பெற்றபிறகு திரும்ப அழைத்துவருவர்.

இந்த டோலியில் மலை மீது செவதற்காக வந்த எஸ்.பி.பி.,டோலி துாக்கும் கூலி தொழிலாளர்களை பார்த்து,‛ என்னை துாக்கிச் செல்லும் சிரமத்தை கொடுத்துவிட்டேன் மன்னிக்கனும்' என்று சொல்லியவர் யாருமே எதிர்பாரத யாருமே இதுவரை செய்திராத ஒரு காரியத்தை செய்கிறார். ஆம் அந்த டோலி தொழிலாளர்களின் கால்களை தொட்டு வணங்குகிறார்.அதன்பிறகே பயணத்தை தொடர்கிறார்.

சில வீடியோக்களை பார்க்கும் போது அவர் பாட்டைவிட பேச்சு இன்னமும் நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கிறது.

கொரோனா காரணமாக வருமானமின்றி தவிக்கும் மேடைக்கச்சேரிக் கலைஞர்களுக்கு பண உதவி செய்வதற்காக நடக்கும் ஆள் இல்லாத ஆன்லைன் கச்சேரியில் பாடி உதவுவதற்காக மேடைக்கு வரும் எஸ்.பி.பி,.என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் கொரோனாவை நாம் குற்றமே சொல்லக்கூடாது அது நமக்கு அடக்கமாக இரு அமைதியாக இரு எளிமையாக இரு என்று பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறது.

நமது முன்னோர்கள் நமக்கு தண்ணீர் ஒடிய ஆறு,நிறைய மரங்கள்,சுத்தமான காற்று,விளையும் நிலங்கள் என்று எவ்வளவோ நல்ல விஷயங்களை தந்தனர் ஆனால் நாம் அது அத்தனையையும் அழித்துவிட்டு இயற்கையை பாழடித்துவிட்டு பாழ்பாட்டு போன மயானம் போன்ற இந்த பூமியை அல்லவா வரும் சந்ததியினருக்கு தரப்போகிறோம் இந்த கொடுமையை இயற்கை தாங்காமல் ஒரு பாடம் நடத்துகிறது படித்துக் கொள்வோமே.

இந்த உலகம் சிரித்தால்தான் நீயும் நானும் சிரிக்கமுடியும் செழிப்பாக இருக்கமுடியும் இந்த உலகம் சாப்பிட்டால்தான் நாமும் சாப்பிடமுடியும் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னால் பாடிய அனுபவம் நிறைய இருக்கிறது இப்போது ரசிகர்களே இல்லாமல் ஆன்லைனில் பாடுகிறேன் எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது நிகழ்ச்சியை ஆங்காங்கே இருந்து கேட்பவர்கள் கைதட்டிக் கொள்ளுங்கள் இந்த மேடைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நீங்களும் உதவிடுங்கள் என்று உணர்வு பூர்வமாக பேசுகிறார்.

இரண்டு நாட்களாக தொலைக்காட்சியில் இவரது பாடல்கள்தான் விடாமல் ஒலிக்கின்றது நாம் அடிக்கடி முனுமுனுத்துக் கொண்டு இருக்கும் பாடல் எல்லாம் இவர் பாடியதுதானா வீட்டில் உள்ள மூன்று தலைமுறைகளும் வியந்து கேட்கின்றனர்.

தெலுங்கு மொழி தெரியாது ஆனாலும் தமிழகத்தின் பட்டி தொட்டியில் உள்ள தமிழர்கள் எல்லாம் சங்கரா பரணம் என்ற தெலுங்கு படத்தை விழுந்து விழுந்து பார்த்தனர் காரணம் எஸ்.பி.பியின் பாடல்கள்.

கொரோனாவை வென்றார் ஆனால் திடீர் மாரடைப்பு அவரை வீழ்த்திவிட கண்ணாடிப் பெட்டிக்குள் மீளாத்துாக்கத்தில் இருந்த அவரைக் காண மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வீட்டில் குவிந்தனர்.

ஏழை பணக்காரர் உழைப்பாளி முதலாளி இளையவர் முதியவர் என எல்லாத்தரப்பினரும் கண்ணீருடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனனர்.

அவரவர் வாழ்க்கையை புரட்டிப்போட்ட எஸ்பிபியின் பாடல்களை அவர்களது வாய் முணுமுணுக்கிறது ஒரு ரிக்சா தொழிலாளி கைகள் இரண்டையும் விரித்துக்கொண்டு ‛வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே' என்ற சோக பாடலை அழுதபடி பாட கேட்பவர்கள் கண்களிலும் கண்ணீர்.

இரவு நீண்ட நீண்ட தொலைவில் உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்படுகிறது மக்கள் கூட்டம் கூட்டமாக ரோட்டிற்கு வந்து அவர் உடல் சென்ற வேன் மீது மலர்கள் துாவுகின்றனர்.

ரசிகர்கள் விடியும் வரை மட்டுமல்ல விடிந்த பிறகும் அஞ்சலி செலுத்த வந்தபடி இருக்கின்றனர்.சடங்குகளின் நிறைவாக ‛பாடும் நிலாவை' குழிக்குள் இறக்கும் முன்பாக மகன் சரண் தந்தையை பிரிய மனமில்லாமல் குமுறிக் குமுறி அழுகிறார்.

பல்வேறு வாசனை திரவியங்களுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.கனத்த இதயத்துடன் அனைவரும் அங்கு இருந்து கலைகின்றனர்.

அந்த நேரம் ‛இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்'எஸ்.பி.பி.,யின் ஒரு பாடல் மிதந்து வருகிறது..

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
10-அக்-202009:25:56 IST Report Abuse
Bala Murugan இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. பதினாறாம் நாள் பூஜை செய்வார்களா ? முப்பதாம் நாள் பூஜை செய்வார்களா ? நாட்கள் ஓடிவிட்டது. இங்கு செய்திகளை பகிர்வதால் எஸ்பிபி அவர்களிடமும் அவர் குடும்பத்தினருடனும் உரையாடுவதாக உணர்கிறேன்.
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
07-அக்-202008:41:16 IST Report Abuse
Bala Murugan அய்யா எஸ்பிபி அவர்களே எப்படி இருக்கிறீர்கள் ? பத்து நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் உயிரோடு இருக்கும்போதும் உங்களை நேரில் பார்க்க முடியவில்லை. இனிமேலும் நேரில் பார்க்க முடியாதே உங்கள் குரலை இன்னொருவர் கொண்டு பாடலாம். உங்களை மாதிரி இன்னொருவர் பேசுவார். ஆனால் உங்களையே மறுபடி பார்க்க இயலாதே என்னையும் கூப்பிட்டு கொள்ளுங்கள் அய்யா
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
28-செப்-202007:02:03 IST Report Abuse
ravi SPB ஒரு சகாப்தம். நடைமுறைப்படுத்தமுடியாத ஒரு ஆற்றலின் முழுவடிவம். பாசத்தால் அன்பால் எளிமையால் தன்னடக்கத்தால் எல்லோரையும் கட்டிப்போட்டவர். எம்ஜிஆருக்குபிறகு மக்கள் கண்களில் நீரை பார்த்தது இவருக்காகத்தான். என்னவோ எல்லோருக்கும் பிடித்ததுபோல் எமனுக்கு பிடித்துவிட்டது இவரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X