பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : தெலுங்கானாவில் பருவநிலை காரணமாக பல்வேறு இடங்களில் அடுத்த 5 நாட்கள் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. அதிகரிக்கும் கனமழையால் முக்கிய ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

இது தொடர்பாக அம்மையம் கூறுகையில், கிழக்கு பீஹார் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சூறாவளி சுழற்சி ஏற்படும். இதன் விளைவாக தெற்கு சத்தீஸ்கர் முதல் தெற்கு கர்நாடகா வரையும் தெலுங்கானா மற்றும் ராயலசீமா முழுவதும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, ஜனகாவ்ன், ரங்காரெட்டி, சித்திப்பேட்டை, வாரங்கல் கிராமப்புறம், சூர்யாபேட்டை, மற்றும் மகாபூப்நகர் ஆகிய இடங்களில் மிக அதிக மழை பெய்தது. மேலும்சூர்யாபேட்டை, விக்ராபாத் உள்ளிட்டவற்றிலும் பலத்த மழை பெய்தது. தெலுங்கானாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202021:05:22 IST Report Abuse
Ramesh Sargam முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டதால், மாநில அரசு கொஞ்சம் உஷாராக இருந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். இல்லை, இப்போது நன்றாக தூங்கிவிட்டு, பேரிழப்பு ஏட்பட்டபின், ஓய்யாரமாக ஹெலிகாப்டரில் மாநிலத்தை சுற்றிப்பார்த்து, மத்திய அரசிடம் கையேந்துவது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X