ரூ.53 ஆயிரம் கோடி சேமிக்க அனல் மின் நிலையங்களை மூட ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.53 ஆயிரம் கோடி சேமிக்க அனல் மின் நிலையங்களை மூட ஆலோசனை

Updated : செப் 28, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (8)
Share
'நாட்டின், 11 மாநிலங்களில் உள்ள, நிலக்கரியில் இயங்கும், 54 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனல் மின் நிலையங்களை மூடுவதால், 53 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்' என, தனியார் ஆலோசனை அமைப்பு ஆய்வறிக்கை கூறுகிறது. 'இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும்' என, அந்த அமைப்பு கூறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், நாட்டின் பொரு ளாதாரம் கடுமையாக
 நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூட..ஆலோசனை!

'நாட்டின், 11 மாநிலங்களில் உள்ள, நிலக்கரியில் இயங்கும், 54 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனல் மின் நிலையங்களை மூடுவதால், 53 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்' என, தனியார் ஆலோசனை அமைப்பு ஆய்வறிக்கை கூறுகிறது. 'இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும்' என, அந்த அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால், நாட்டின் பொரு ளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், வீண் செலவுகளை தவிர்க்கவும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், 'டிஸ்காம் எனப்படும், மாநில மின் பகிர்மான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம், 53 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்' என, தனியார் ஆலோசனை அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக, கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், சி.ஆர்.எச்., எனப்படும், 'கிளைமேட் ரிஸ்க் ஹாரிசான்' என்ற தனியார் ஆய்வு அமைப்பு, மத்திய அரசுக்கு அளித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தாண்டு, ஏப்., 30 நிலவரப்படி, நாட்டில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையின் அளவு, 1 லட்சம் கோடி ரூபாய். அதில், தமிழகம், ஆந்திரா, பீஹார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய, 11 மாநிலங்கள் மட்டும் செலுத்த வேண்டிய தொகை, 54 ஆயிரத்து, 695 கோடி ரூபாய்.


உற்பத்தி திறன் குறைவுகொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அதிகரித்துள்ளது.அதனால், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், டிஸ்காம் நிறுவனங்களின் வர்த்தகம் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி, மின் திருட்டு, வருவாய் குறைவு, அரசு கொள்கை என, பல்வேறு காரணங்களால், டிஸ்காம்களின் பொருளாதார சுமை மேலும் அதிகரித்து வருகிறது.இந்த, 2020 - 2021 நிதியாண்டின் இறுதியில், டிஸ்காம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையின் அளவு, 4.5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது; இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 30 சதவீதம் அதிகமாகும்.நாட்டின், 11 மாநிலங்களில் உள்ள நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள், 54 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை.

இவற்றின் மின் உற்பத்தி திறன் குறைந்துள்ளது. இவை செயல்படுவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகமாக உள்ளது.தற்போது பெரும்பாலான, டிஸ்காம் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், 11 மாநிலங்களில், நிலக்கரியில் இயக்கப்படும் அனல் மின் நிலையங்களை மூடுவதால், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 53 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.இந்த நடவடிக்கையால், மாநில அரசுகள் மற்றும் டிஸ்காம் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த முடியும். மக்களுக்கும் மின்சார கட்டணம் குறையும்.
சுற்றுச்சூழல்புதிய தொழில்நுட்பத்துடன், மாசு ஏற்படுத்தாத முறையிலான மின் திட்டங்களை ஊக்குவிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும்.புதிய மின் உற்பத்தி நிலையங்களுடன் ஒப்பிடுகையில், பழைய மின் உற்பத்தி நிலையங்களில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய, நிலக்கரி அதிக அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது செலவை அதிகரிக்க செய்வதுடன், சுற்றுச்சூழல் மீது பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால், பழைய மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக மூடிவிட்டு, மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி முறைக்கு மாற வேண்டும்.
நம் நாட்டில், காற்று மாசு ஏற்படுத்துவதில், நிலக்கரி முன்னிலையில் உள்ளது.

நிலக்கரி பயன்படுத்தும்போது ஏற்படும் மாசால், ஆண்டுக்கு, 83 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு முக்கிய காரணமான, கார்பன் டை- - ஆக்சைடு மாசில், 44 சதவீதம், நிலக்கரி பயன்பாட்டாலேயே ஏற்படுகிறது.அதனால், பழைய மின் உற்பத்தி நிறுவனங்களை மூடுவதால், இரண்டு வகைகளில் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.வரும், 2022ம் ஆண்டுக்குள் காற்றின் தரத்தை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது. இதை எட்டுவதற்கு, இந்த மின் நிலையங்களில், புதிய, விலை உயர்ந்த தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

மற்றொன்று, நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், மிக அதிக விலைக்கு, இந்த மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதை தவிர்க்கலாம். இந்த நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, அடுத்த, ஐந்து ஆண்டு களில், 53 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X