பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டுக்குள் வருமா? தலைமை செயலர் ஆலோசனை

Updated : செப் 28, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா தொற்று பரவலை தடுக்க, அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் சண்முகம், அறிவுரை வழங்கி உள்ளார்.கொரோனா பரவல் தடுப்பு குறித்து, கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலுார், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், நாமக்கல், தர்மபுரி, திருவாரூர் ஆகிய, ௧௫
கொரோனா கட்டுக்குள் வருமா? கலெக்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: 'கொரோனா தொற்று பரவலை தடுக்க, அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் சண்முகம், அறிவுரை வழங்கி உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு குறித்து, கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலுார், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், நாமக்கல், தர்மபுரி, திருவாரூர் ஆகிய, ௧௫ மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் சண்முகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று ஆலோசனை நடத்தினார்.



மாவட்டங்களில், பரிசோதனைகளை அதிகப்படுத்தி, தொற்று அறிகுறிகளை கண்டறிவது குறித்தும், பாதிப்புக்குள்ளானோருக்கான சிகிச்சை முறைகள் குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தடை செய்யப்பட்ட பகுதிகளில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை பேருக்கு, நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து, அதை கண்காணிக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மருத்துவமனைகளில், தேவையான படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள், பிற மருத்துவ சாதனங்கள் தயாராக இருப்பதை, மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.சில நாட்களாக, மாவட்டங்களில், நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய் தொற்று பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்து, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். முறையாக திட்டமிட வேண்டும். இறப்பு விகிதத்தை குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் நடவடிக்கைகளை, பிரதமர் பாராட்டி உள்ளார். எனவே, கலெக்டர்கள் கொரோனா நோய் தடுப்பு பணியில், முழு கவனம் செலுத்த வேண்டும்.நோய் தொற்று பரவலை தடுத்திட, அனைத்து துறை அலுவலர்களையும், ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, தலைமை செயலர் அறிவுரை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, நேற்று மாலை, சென்னை யில், மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினருடன், கொரோனா தடுப்பு குறித்து, தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார்.


பள்ளிகள் திறப்பு: 1ல் செயலர் ஆலோசனை



பள்ளிகள் திறப்பு தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், பள்ளி கல்வி செயலர், வரும், 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து, தமிழகத்திலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பள்ளிக்கு வரவழைத்து, அவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகளை நடத்தலாம் என, தமிழக தலைமை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, வரும், 5ம் தேதி முதல், மாணவர்களை பள்ளிகளுக்கு செல்ல அனுமதித்து, வகுப்புகளை நடத்தலாமா என, பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளிடம் விபரம் கேட்கும் வகையில், வரும், 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அதிகாரிகள், 20 வகையான விபரங்களை திரட்டி, கூட்டத்தில் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தயாராக வரும்படி, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202007:16:23 IST Report Abuse
ஆப்பு கேரளாவில் மையம் கொண்டிருக்கும் இரண்டாவது கொரோனா புயல் இன்னும் சில நாள்களில் கேரள எல்லை வழியாக தமிழகத்திலும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X