பீஹார் தேர்தலுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

Updated : செப் 27, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : பா.ஜ.,வில், தேசிய அளவிலான நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக, பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பின், மத்திய அமைச்சரவையிலும் மாற்றங்கள்செய்யப்படும் என, பரபரப்பு நிலவுகிறது.பா.ஜ.,வின் தேசியத் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். வழக்கமாக புதிய தலைவர் பதவியேற்றதும், தேசிய அளவிலான நிர்வாகிகள்
பீஹார் தேர்தலுக்குப் பின் மத்திய அமைச்சரவையில்  மாற்றம்?

புதுடில்லி : பா.ஜ.,வில், தேசிய அளவிலான நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக, பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பின், மத்திய அமைச்சரவையிலும் மாற்றங்கள்செய்யப்படும் என, பரபரப்பு நிலவுகிறது.

பா.ஜ.,வின் தேசியத் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். வழக்கமாக புதிய தலைவர் பதவியேற்றதும், தேசிய அளவிலான நிர்வாகிகள் மாற்றப்படுவர்.சில நிர்வாக காரணங்களால், இந்த மாற்றம் தாமதமடைந்தது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால், நிர்வாகிகள் மாற்றம் செய்வதில், மேலும் தாமதம் ஏற்பட்டது. நட்டா பதவியேற்று எட்டு மாதங்களாகியுள்ள நிலையில், தற்போது நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.இதில் பல புதுமுகங்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில், பெரும்பாலான மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


புதுமுகங்கள்முக்கிய அம்சமாக ராம் மாதவ்,பி. முரளிதர் ராவ், அனில் ஜெயின், சரோஜ் பாண்டே ஆகியோர், பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுக்குப் பதிலாக புதுமுகங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரின், எம்.பி., யான தேஜஸ்வி சூர்யா, கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து, மூத்த தலைவர் உமா பாரதி, வினய் சகஸ்ரபுதே, பிரபாத் ஜா, ஓம் பிரகாஷ் மாத்துர், ஷியாம் ஜாஜு விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், மூத்த தலைவர்கள் முகுல் ராய், பைஜயந்த் ஜெய் பாண்டே உள்ளிட்டோர், தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கட்சி மீதான அதிருப்தியில் உள்ளதால், சமாதானப்படுத்தும் நோக்கத்தில், வசுந்தரா ராஜே மற்றும் ரமண் சிங்குக்கு, தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகுல் ராய் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் தவாடே, பங்கஜா முண்டே, மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கில் இருந்தனர்.அதனால், பிரச்னையை தவிர்க்க, அவர்களுக்கு தேசியச் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தேசிய பொதுச் செயலர்களாக உள்ள எட்டு பேரில், ஐந்து பேர் புதுமுகங்கள்.


சேவை பயன்படுத்தப்படும்ஆந்திராவைச் சேர்ந்த தலித் தலைவர் துஷ்யந்த் குமார் கவுதம், டி. புரந்தேஸ்வரி, பஞ்சாபைச் சேர்ந்த தருண் சுக், அசாமைச் சேர்ந்த திலிப் சைக்கியா, கர்நாடகாவைச் சேர்ந்த, சி.டி. ரவி ஆகியோர் பொதுச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பூபேந்தர் யாதவ், கைலாஷ் விஜயவர்க்கியா, அருண் சிங், பொதுச் செயலர் பதவியில் தொடர்கின்றனர்.'பலர் பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ளதால், அவர்கள் மீது அதிருப்தி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கட்சிக்கான அவர்களது சேவைகள் எப்போதும் அங்கீகரிக்கப்படும்.

'உரிய முறையில், தகுந்த இடத்தில் அவர்களின் சேவை பயன்படுத்தப்படும்' என, மூத்த தலைவர் ஒருவர்தெரிவித்தார்.கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்கள் எண்ணிக்கை, 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.,யாக உள்ள அனில் பலுானி, தலைமை செய்தித் தொடர்பாளராகவும், தேசிய ஊடகப் பிரிவு தலைவராகவும் இருப்பார். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோட், டாம் வடக்கன் உள்ளிட்டோர், செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இடம் கிடைக்கலாம்அமித் மாளவியா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக தொடர்கிறார்.அதே நேரத்தில் கட்சியின் உயர்நிலை குழுவான, பார்லிமென்ட் குழுவில் மாற்றம் செய்யப்படவில்லை. மகளிர் அணிக்கு தலைவர் அறிவிக்கப்படவில்லை. கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகளில், இதுவரை எட்டு பெண்கள் இருந்தனர். தற்போது அது, 13 ஆக உயர்ந்துள்ளது.பீஹார் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தல் முடிந்ததும், அடுத்தக்கட்டமாக, மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன்னோட்ட மாக, இந்த நிர்வாகிகள் மாற்றம் பார்க்கப்படுகிறது.தற்போது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சிலருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.


பாரம்பரியத்தைகாப்பாற்றுங்கள்!கட்சியின் தேசிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். கட்சியின் பாரம்பரியத்தைகாப்பாற்றும் வகையில் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, தன்னலமில்லாமல் உழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.நரேந்திர மோடிபிரதமர்


தமிழக பா.ஜ.,வினர் ஏமாற்றம்!பா.ஜ., தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும், இடம் அளிக்கப்படாதது, மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.ஏற்கனவே, தேசியச் செயலராக இருந்த எச்.ராஜா, அந்த பொறுப்பை இழந்துள்ளார்; அவருக்கு வேறு பொறுப்பும் வழங்கப்படவில்லை.இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பா.ஜ., தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், அடுத்ததாக வெளியாக உள்ள, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202022:31:06 IST Report Abuse
ஆப்பு நோட்டாவுக்கு கீழே வாக்குகள் வாங்கிக் குடுத்தா கடின உழைப்புக்கு கெவுனர் பதவி கிடைக்கும். தீயா வேலை செய்யணும்.
Rate this:
Cancel
arasu -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202014:30:25 IST Report Abuse
arasu தமிழ் நாட்டில் பிஜேபிக்கு mp இல்லை mla இல்லை. ஓட்டு சதவீதத்தில் ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் உள்ள கட்சி. இவர்களுக்கு எதற்கு தேசிய பதவி என்று விட்டு விட்டார்களோ
Rate this:
Cancel
27-செப்-202011:32:11 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழகத்திலேயே கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க ஆள் பலம் வேண்டியுள்ளது. மாநிலத் தேர்தல் நெருங்கும்பொது தேசீயப் பதவிகளுக்கு தலைவர்களை அனுப்பமுடியாது.😑 ஏற்கனவே மத்திய கேபினெட்டில் டாப் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கொடுத்துள்ளதே போதுமான மரியாதைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X